Nivetha Pethuraj: சின்னப் பையனிடம் ஏமாந்த நிவேதா பெத்துராஜ்.. கைவரிசையைக் காட்டியது யார் தெரியுமா?
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதால், இவரது கதைத்தேர்வுகள் மற்ற கதாநாயகிகளை விட வித்தியாசமாக உள்ளது என்ற பேச்சு திரையுலகில் உள்ளது. இவர் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகின்றார். இவர் ஒரு சின்னப்பையனிடம் ஏமாந்த கதைதான் இப்போது கோலிவுட்டில் வேகமாக பரவி வருகின்றது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகை நிவேதா பெத்துராஜ், மதுரையைச் சேர்ந்தவர் என்றாலும், தனது பள்ளி மற்றும் கல்லூரியை துபாயில் முடித்தவர். அதன் பின்னர் அங்கேயே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் இந்தியா யுஏஇ' போட்டியில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா யுஏஇ-ஆக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற மிஸ் இந்தியா வோர்ல்ட் வைட் 2015 என்ற போட்டியில் பங்கேற்று டாப் 5 இடங்களில் இடம் பிடித்தார்.

நடிப்பு: நடிப்பிலும் ஆர்வம் இருந்ததால் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்தார். தொடர்ந்து சரியான கதைத்தேர்வு, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிப்பது என தனது கதைத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக தமிழில் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என்மனசு தங்கம், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் ஆகியப் படங்களைக் கூறலாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் என்றால் அது, கடந்த ஆண்டு வெளியான BOO படம்தான்.

ஏமாற்றம்: இந்நிலையில் இவர் தான் ஒரு சின்னப் பையனிடம் ஏமாந்தது குறித்து கூறியது பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், " நான் காரில் சென்னை அடையார் சிக்னலில் காத்துக் கொண்டு இருந்தேன். அப்போது அங்கு 8 வயது சிறுவன் புத்தகங்களுடன் வந்து அவற்றை விற்றுக்கொண்டு இருந்தான். நான் புத்தகத்தை வாங்கலாம் என நினைத்து வாங்கினேன். ஒரு புத்தகத்தை அவன் ரூபாய் 50 எனக் கூறினான். நான் பரவாயில்லை என, ரூபாய் 100 கொடுத்தேன். அவன் என்னிடம் ரூபாய் 500 கேட்டான்.

அதிர்ச்சி: நான் உடனே அவனிடம் புத்தகத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, நான் கொடுத்த ரூபாய் 100ஐயும் வாங்கிவிட்டேன். உடனே அந்த சிறுவன் அவன் என்னிடம் விற்க முயன்ற புத்தகத்தை காருக்குள் வீசிவிட்டு, என் கையில் இருந்த ரூபாய் 100ஐயும் பிடுங்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். எனக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. அந்தச் சின்னப் பையன் என்னை ஏமாற்றிவிட்டான்" எனக் கூறினார். நிவேதா பெத்துராஜ்க்கு இவ்வாறு நடைபெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











