800 Blue Sattai Maran Review: ”நல்லவேளை விஜய் சேதுபதி நடிக்கல..” 800 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது.
800 என்ற டைட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.

800 படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் விலகினார்.
இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள 800 படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார்.
800 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
இலங்கை கிரிக்கெட் அணி மட்டுமின்றி உலகளவில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் முத்தையா முரளிதரன். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் வரிசையில், சுழல் பந்துவீச்சின் மாஸ்டராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக வெளியாகியுள்ளது.
800 என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீபதி இயக்கியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் 800 படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி. இந்நிலையில், இந்த வாரம் வெளியான 800 படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
ப்ளூ சட்டை மாறனும் இந்தப் படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். இதுபற்றிய அவரது விமர்சனத்தில், பொதுவாக பயோபிக் படம் என்றால், ஹீரோவின் கதையை ரெண்டு பேர் தேவைப்படும். அப்படி இதில் பத்திரிகையாளராக வரும் நாசர் முத்தையா முரளிதரனின் கதையை விவரிக்கிறார். படத்தின் தொடக்கமே முத்தையா முரளிதரன் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்றவர்கள் என்பதை காட்டி விடுகின்றனர்.
மலையகத் தமிழரான முத்தையா முரளிதரன், 1977ல் இலங்கையில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து மீண்டு தனது கிரிக்கெட் வீரர் கனவை அவர் எப்படி அடைந்தார் என்பது தான் கதை. ஆரம்பத்தில் பல தடைகளை சந்திக்கும் முத்தையா முரளிதரன், மலையகத் தமிழர் என்பதால், இலங்கை கிரிக்கெட் போர்டில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இன்னொருபக்கம் சிங்களர்களின் வெறுப்புணர்வும் அதிகம் உள்ளது.
பின்னர் இலங்கை அணியில் இடம்பிடித்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்படி கிடைக்கும் நேரத்திலும் பெளலிங் போடும் போது கை மடங்குவதாக புகார் வருகிறது. இப்படியான அனைத்து தடைகளையும் தாண்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை முத்தையா முரளிதரன் வீழ்த்தி சாதனை படைத்தது தான் இந்தப் படத்தின் கதை என்றுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
திரைக்கதை தொய்வில்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்வதாகவும், கிரிக்கெட் மட்டுமில்லாமல் இலங்கையின் யுத்தம் நடைபெற்ற போது நடைபெற்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். ஹீரோவின் பிளாஷ்பேக் காட்சிகள், தமிழ் அமைப்புத் தலைவர்களை முத்தையா முரளிதரன் சந்திக்கும் காட்சி, அவரது மனைவி வரும் சீன் அனைத்தும் நன்றாக இருந்தது. அதேபோல் நல்லதோ கெட்டதோ, 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் போனது நல்லது தான்.
ஒருவேளை விஜய் சேதுபதி நடித்திருந்தால், இந்தப் படம் முத்தையா முரளிதரன் தெரியாமல் போயிருப்பார். இது முழுக்க முழுக்க விஜய் சேதுபதி படமாகவே வந்திருக்கும் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் ஒருமுறை 800 படத்தை பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











