twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    800 கோடிகளை காலி பண்ண கொரோனா.. ஆடிப்போன பாலிவுட்.. இப்படியே போனா என்ன ஆகும்?

    |

    மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டான பாலிவுட் மார்க்கெட்டை ஒரே அடியாக அதள பாதாளத்தில் கொண்டு போய் தள்ளியுள்ளது கொரோனா வைரஸ்.

    கடந்த வாரம் ரிலீசான படங்கள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், வசூலை குவிக்க முடியாமல், மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளன.

    மேலும், வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக வேண்டிய படங்களின் வெளியீடுகளும் ஒரே அடியாக ஒத்தி வைக்கப்பட்டு, சினிமா துறைக்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை உண்டு செய்துள்ளது.

    பாதித்த பாகி 3 வசூல்

    பாதித்த பாகி 3 வசூல்

    அகமது கான் இயக்கத்தில் டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் கடந்த மார்ச் 6ம் தேதி வெளியான படம் பாகி 3. பாலிவுட்டில் அசுர வேகத்தில் வசூலை குவித்து வந்த இந்த படம், கொரோனா பீதி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், 25 முதல் 30 கோடி ரூபாய் வசூலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆங்கிரேஸி மீடியம்

    ஆங்கிரேஸி மீடியம்

    ஹோமி அடாஜினியா இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான இர்ஃபான் கானின் ஆங்கிரேஸி மீடியம் திரைப்படம், கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ரிலீசான உடனே இர்ஃபான் கான் படத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    தள்ளிப்போன ரிலீஸ்

    தள்ளிப்போன ரிலீஸ்

    அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடிப்பில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் விரைவில் வெளியாக இருந்த சூர்யவன்ஷி திரைப்படம் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான தக்த், சல்மான் கானின் ராதே, பிரம்மாஸ்த்ரா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    800 கோடி லாஸ்

    800 கோடி லாஸ்

    மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மட்டும் பாலிவுட்டில் சுமார் 800 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கணித்துள்ளனர். மார்ச் மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்படாமல், மேலும் அதிகரித்துக் கொண்டே போனால், மிகப்பெரிய பொருளாதார இழப்பீடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மற்ற இடங்களில்

    மற்ற இடங்களில்

    கொரோனா வைரஸ் தாக்கம் பாலிவுட்டை மட்டுமின்றி, இந்தியாவில் கோலிவுட், டோலிவுட், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி சினிமா மார்க்கெட்டையும் காலி செய்துள்ளது. பாதுகாப்புடன் ஷூட்டிங் நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளதால், அனைத்து ஷூட்டிங் மற்றும் பட ரிலீஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    English summary
    Bollywood cinema industry fell into a 800 crores loss due to coronavirus pandemic. Film analyst and Box office reporter shared the details.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X