80ஸ் நடிகைகள் ஒன்று கூடி அரட்டை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

சென்னை : 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

80s actors Meet long years ago, photos viral on social media

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நடிகையாக வலம் வந்தவர்களை என்றுமே மறக்க முடியாது. என்பதுகள் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்தகால கட்டத்தில் தான் பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாக்யராஜ் ஆகிய இயக்குனர்கள் வரிசைகட்டி நின்று பல வெற்றிப்படங்களை நமக்கு கொடுத்தனர்.

படங்களை மட்டும் அல்லாது பலநடிகைகளின் வரவும் இந்த காலகட்டத்தில் அதிகமாகவே இருந்தது.ராதிகா, ராதா, அமலா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, சீதா, வடிவுக்கரசி,மாதவி, ரதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் திரையில் மின்னினர்.

80s actors Meet long years ago, photos viral on social media

இவர்கள் அனைவரும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டு அன்பை பகிர்ந்து தற்போது வரை நல்ல நண்பர்களாக உள்ளனர். அதுபோன்ற ஒரு சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் , ராதிகா சரத்குமார், ராதா, அம்பிகா, பூர்ணிமா, சுஹாசனி, குஷ்பு, லிசி, நடிகர் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து அரட்டை அடித்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் வார இறுதி நாளில் அனைவரும் ஒன்றாக இணைந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X