80S Buildup Box Office: 80ஸ் பில்டப் வசூலே இவ்ளோ தானா?.. அப்போ சந்தானம் சம்பளம் எவ்ளோ இருக்கும்?
சென்னை: காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சந்தானத்தின் மார்க்கெட்டே வேறலெவலில் இருந்தது. ஆனால், கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமேல் இப்படித்தான் என ஹீரோவான சந்தானம் அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், இதுவரை மினிமம் கியாரண்டி ஹீரோவாக கூட சந்தானம் மாறாதது அவரை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையே வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது என்கின்றனர்.

4 கோடி வைத்துக் கொண்டு மினி பட்ஜெட்டில் படம் எடுக்க வராதீங்க என விஷால் பேசிய நிலையில், சந்தானம் நடிக்கும் பல படங்களின் மொத்த வசூலே 4 கோடி கூட வராமல் இருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
100 கோடி ஹீரோ சிவகார்த்திகேயன்: விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்து கோலிவுட்டின் அடுத்த வசூல் நாயகனாக மாறி விட்டார். ஆனால், அதே விஜய் டிவியில் இருந்து காமெடியனாக வந்து ஹீரோவாக மாறிய சந்தானத்தின் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக இருப்பதாக கூறுகின்றனர்.
80ஸ் பில்டப் வசூல்: ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகளை போட்டு அனைவருக்கும் சம்பளம் கொடுத்து வெளியான 80ஸ் பில்டப் படம் முதல் நாளில் 1.2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளான நேற்று வெறும் 1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களிலும் சேர்த்து 2.2 கோடி வசூல் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மீண்டும் 1.2 முதல் 1.5 கோடி வரை வசூல் செய்தாலும் ஒட்டுமொத்த வசூல் 4 கோடியை எட்டாது என்றும் வார நாட்களில் சொல்லவே தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.
சந்தானம் சம்பளம்: படத்தின் வசூலே இப்படி படுமோசமாக இருக்கும் நிலையில், நடிகர் சந்தானம் சம்பளம் எப்படி இருக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பல படங்களை அவர் தயாரித்தும் நஷ்டத்தை சந்தித்து விட்டார் என்றும் கூறுகின்றனர். முன்னதாக வெளியான கிக் படமும் பிக்கப் ஆகவில்லை. பில்டப் படமும் படுத்து விட்டது. சந்தானம் ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலே பெரிய விஷயம் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











