Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
இதையும் விடலையா இவிங்க.. பிக் பாஸ் கதையும் படமாகிறது.. "அவர்"தான் ஹீரோயினாம்!
சென்னை : சினிமாவை பொறுத்தவரை நட்சத்திரங்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்படுவதும், பிறகு ஹீரோ அல்லது ஹீரோயினாக என்ட்ரி கொடுப்பதும் ஒன்றும் புதிதல்ல.
காலையிலேயே
மேக்கப்
போட்டுக்கிட்டு..
நடுரோட்டில்
இப்படி
ஓடுறாரே
அஞ்சலி..
என்ன
விஷயமா
இருக்கும்?
தற்போதைய தலைமுறை நடிகர்களில் சூர்யா, கார்த்தி, சிம்பு, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், அதர்வா முரளி ஆகியோர் மிகவும் பிரபலமான நட்சத்திர வாரிசுகள்.

மற்றுமொரு நட்சத்திர வாரிசு
இவர்கள் வரிசையில் தற்போது நட்சத்திர தம்பதிகளான டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் இளைய மகளான ஷிவாத்மிகா ராஜசேகரும் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அதுவும் நந்தா பெயசாமி இயக்கும் புதிய தமிழ் படத்தில் தான் அறிமுகமாக உள்ளார்.

80 களின் காதல் ஜோடி
டாக்டர் ராஜசேகர், தமிழகத்தில் பிறந்து பாரதிராவின் புதுமை பெண் படத்தின் மூலம் நடிக்க வந்தவர். ஆனால் தெலுங்கு படமான இது தான்டா போலீஸ் படம் தான் இவருக்கு ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. தற்போது தெலுங்கில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து உடைய நடிகர்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.
ராஜசேகர் நடிக்க வந்த அதே கால கட்டத்தில் தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ஜீவிதா. இவர்கள் இருவரும் இணைந்து சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளனர். அப்போது இவர்களுக்கு காதல் ஏற்பட்டு, பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பெயர் வைக்காத படம்
இந்த தம்பதியின் இளைய மகள் ஷிவாத்மிகா, பெயரிடப்படாத படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

பிக் பாஸ் சினிமா ஆகிறது
இந்த படம் பிக் பாஸ் நிகழ்ச்சியை மையமாகக் கொண்டது. ஆனால் கிராமத்து சூழலில் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தின் சூட்டிங் வரும் மார்ச் மாதம் திண்டுக்கல்லில் துவங்க உள்ளது. இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.