ஒன்று கூடி பழைய நினைவுகளை அசை போட்ட நடிகர்- நடிகைகள் #80sreunion
Recommended Video

சென்னை: 80களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிககைளின் 9வது சந்திப்பு நடைபெற்றுள்ளது.
1980களில் பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து பழைய நினைவுகளை அசை போட்டு வருகின்றனர்.
இந்த சந்திப்பு கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.
நடிகர்கள்
9வது ஆண்டு சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. ஆண்டுதோறும் அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒரே நிறத்தில் உடை அணிவது வழக்கம். இந்த ஆண்டு ஊதா கலரு உடை அணிந்து வந்திருந்தனர்.
நடிகைகள்
இந்த வருடாந்திர சந்திப்பு நடக்க முக்கிய காரணம் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிசி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 80களில் பிரபலமாக இருந்த நடிகைகள் இன்னும் இளமையாகவே தெரிகிறார்கள்.
வெள்ளை சட்டை
இந்த ஆண்டு சந்திப்பில் நடிகர்கள் அர்ஜுன், சத்யராஜ், சுமன், ரஹ்மான், சரத்குமார், பாக்யராஜ், மோகன்லால், ஜெயராம், ஜாக்கி ஷ்ராஃப், நரேஷ், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போர்ச்சுக்கல்
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது குடும்பத்தாருடன் போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து அவர் நேரடியாக சென்னை வந்து வருண்டாந்திர சந்திப்பில் கலந்து கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











