கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்…ரன்வீர் சிங் கிரிக்கெட் பயிற்சி.. வைரலாகும் படங்கள்
சென்னை : பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங், இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவுடன் கிரிக்கெட் பயிற்சி செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
பாலிவுட் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான ரன்வீர் சிங், இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு நடிகர். தன் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் ரன்வீர் சிங். இவர் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார்.

இவர் நடிக்க வந்து பத்து வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் செய்யும் வசூல் சாதனையை இவர் படங்களும் செய்கின்றன மற்றும் குறுகிய காலத்தில் பல வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகர்களில் இவரும் ஒருவர்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நடத்திய நடிகர்களுக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு அதில் தேர்வானார். அவர் நடித்த முதல் திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இவர் நடித்து உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படங்கள் பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத். பிலிம்பேர் விருதை மூன்று முறை பெற்றுள்ளார் நடிகர் ரன்வீர் சிங்.
1983 ஆம் ஆண்டு நம் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கைபற்றியது. அது தற்போது படமாக 83 என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த படத்தை கபீர் கான் இயக்கி வருகிறார். விஷ்ணு வர்தன் இந்தூரி, மது மந்தேனா, தீபிகா படுகோனே மற்றும் சஜித் நதியாட்வாலா இணைந்து தயாரித்து வருகின்றனர்.

கபில்தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனானது மற்றும் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதையும் கதை விவரிக்கிறது.
அதில் ரன்வீர் சிங் கேப்டன் கபில் தேவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இதில் அவரை பார்க்கும் பொழுது கபில் தேவ் போலவே உள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கபில் தேவிடம் ரன்வீர் சிங் பயிற்சி பெறும் புகைபடங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











