twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரம்மாண்டமாக அரங்கேறியது "83" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா

    |

    சென்னை :

    1983 கிரிக்கெட் உலக கோப்பை பற்றிய கதை

    83 எனும் படத்தின் புரோமஷனுக்காக படக்குளு சென்னை வந்தது .சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைப்பெற்ற விழாவில் 83 படக்ககுளுவும் சிறப்பு விருந்தினராக கமலும் கலந்து கொண்டனர் .இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பஸ்ட் லுக் போன்றவற்றை கமல்ஹாசன் தமிழகத்தில் வெளியிட்டார் .
    இந்த படம் 1983ல் இந்திய அணி எவ்வாறு இங்கிலாந்து சென்று கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது எனும் உண்மை வரலாற்றை பற்றிய கதையாகும் .இந்த படம் கடந்த இரண்டு வருடமாக எடுக்கபட்டு வருகிறது .இதில் ரன்வீர் சிங் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    83 Movie poster launched by kamal haasan

    83 படத்தில் நடிக்கும் நம் தமிழ் நடிகர்கள்

    தற்போது நடந்த இந்த விழாவில் அந்த காலத்தில் 1983ல் விளையாடிய அத்துனை வீரர்களின் உருவத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கபட்டு நடித்த அனைத்த வீரர்களும் கலந்து கொண்டனர் .இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதில் இரு தமிழக நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர் .ஒருவர் நாம் அனைவருக்கும் தெரிந்த பிரபல நடிகர் ஜீவா .நடிகர் ஜீவா இயல்பிலே கிரிக்கெட் வீரர் அது நாம் அனைவரும் அறிந்தது .இவர் 83 படத்தில் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்னமாச்சாரி ஶ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .மேலும் இந்த படத்தில் நடித்துள்ள மற்றொரு தமிழக நடிகர் ஆர் .பத்ரி இவர் டெம்பில் மங்கீஸ் எனும் தமிழ் யூடியூப் சேனலில் பணியாற்றியவர் .இவர் கிரிக்கெட் வீரர் சுனில் வல்சன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .

    83 Movie poster launched by kamal haasan

    சத்யம் திரைஅரங்கத்தில் கோலாகலமாக கொண்டாட்டம்

    சென்னை சத்யம் திரையரங்கின் பின் புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நடந்த விழாவில் பெரிய உயர 40அடி உயர பிரமாண்ட கட் அவுட் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடபட்டது . உலக நாயகன் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இதை செய்தார் . இதற்கு பிறகு தாரை தப்பட்டை சத்தத்துக்கு ரன்வீர் செம்ம குத்தாட்டம் போட்டார் .அவருடன் சேர்ந்த ஜீவா பட்டய கிளப்பினார் . அத்தனை நடிகர்களும் உட்சாகமாக ஆடினர் . மேலும் 83 படத்தின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஒரு பேருந்து சத்யம் பின் புறம் நிறுத்தபட்டது .அந்த பேருந்து பார்பதற்கு கிரிக்கெட் வீரர்கள் பயனிக்கும் பேருந்து போல இருந்தது .நிகழ்வின் இறுதியில் 83 படத்தில் கிரிகெட் வீரர்களாக நடித்த அத்துனை பேரும் கிரிக்கெட் வீரர்களை போல அமர்ந்து பேருந்தில் பயனம் மேற்கொண்டனர் .

    83 Movie poster launched by kamal haasan

    கபில் தேவ் சொன்ன குட்டி காமெடி கதை

    சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் 83 உலககோப்பையின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் .அதில் ஶ்ரீகாந்திற்கு ஒரு பழக்கம் உண்டு அது கண்சிமிட்டி கொண்டே மிகவும் துறுதுறுவென செயல் படுவார் அது அவரின் பழக்கம் நாங்கள் உலக கோப்பையை வென்றவுடன் பிரதம மந்திரியை சந்திக்க சென்றோம் அப்போது இப்படி இருக்காதே ஶ்ரீகாந்த் என நான் அறிவுறைத்தேன் என கபில் தேவ் கூறினார், ஆனால் அவர் நேர்மாறாக செய்து பிரதமர் உட்பட அனைவரையும் சிரிக்க வைத்து விட்டார் என நகைச்சுவையாய் கூறினார் . அது மட்டும் அல்லாமல் எனக்கு தமிழ் மொழி பேச தெரியாமல் போனதே என்று மிகவும் வறுத்த பட்டர். பல முறை கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் உணர்ச்சி வச பட்டு மேடையில் பேசும்போது கமலஹாசனை இடிக்க சென்றார். ஒவ்வொரு தடவையும் அவரை தடுத்து கமலை ஸ்ரீகாந்த் இடிக்காமல் மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொண்டார். மிகவும் காமெடியான சம்பங்கள் நிறைய நனடந்தது இந்த மேடையில்

    83 Movie poster launched by kamal haasan

    கமலுடைய சிக்நேச்சர் ஸ்டெப்

    இந்த நிகழ்வின் போது முன்னால் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் ஜீவாவை பற்றி பேசினார் .ஜீவாவை கண்ணமூடிட்டு அட்றா கண்ணா என அவர் ஸ்டைலில் கொடுத்த ஊக்கம் ரசிகர்களை வெகுவாக உற்சாகபடுத்தியது .மேலும் கமல் அவர்கள் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஜீவா ஆடிய நடணத்தை மிகவும் பாராட்டினார் .கமல் பல படங்களில் காலை தூக்கி ஆடும் நடனத்தை இவர்கள் இருவரும் செய்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உட்சாக படுத்தியது , கமல் பல படங்களில் பல பாடல்களில் எப்படி இரண்டு காலை தூக்கி ஒரு சிக்நேச்சர் ஸ்டெப் போடுவாரா அதே போல் ஜீவாவும் ரன்வீரும் பின்பற்றி ஆடினர் . அதை பார்த்த கமல் அவர்கள் பத்துக்கு பத்து மார்க் போட்டு இரண்டு கைகளாலும் தம்ஸ்அப் செய்தார்.

    83 Movie poster launched by kamal haasan

    அரங்கமே எழுந்து நின்று மரியாதை

    இந்த நிகழ்வின் இன்னொரு முக்கிய விஷயம் என்றால் 83 உலககோப்பையை வென்றதற்காக முன்னால் கிரிக்கெட் வீரர் கேப்டன் கபில் தேவ்க்கு சில நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டல்கள் வழங்கபட்டது .முதலில் எனக்கு எதற்கு இதலாம் என மறுத்தார் கபில் தேவ் பின்னர் கமல் கைகாட்டி ரசிகர்களை எழுந்திருக்க சொல்ல அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள் ,அது ஒரு ஆனந்ததருனமாக அமைந்தது என்றே சொல்லலாம் .

    English summary
    83 is yet another sports movie which tells about the history of 1983 cricket world cup. lots and lots of untold stories and great memoirs of the great players who won the world cup for the country is being portrayed in this movie with valuable sources. kapildev who was the captain of indian team that time came to chennai for this poster launch event and felt very glad. cricketer srikanth joned this event and kamalahassan launched the Giant size poster in sathyam theater parking area.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X