83 பட பிரீமியர் ஷோவிற்கு குடுமிகளுடன் வந்த ரியலும் ரீலும்... வைரலான புகைப்படங்கள்!

மும்பை : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 83ல் நடைபெற்ற உலக கோப்பையை ஜெயித்தது இந்திய அணி.

Recommended Video

83 படம் எப்படி இருக்கு? | Kapil Dev, Ranveer Singh, Yessa? Bussa?

அந்த வரலாற்று சம்பவத்தை படமாக எடுத்துள்ளது 83 படக்குழு.

இந்தப் படம் நாளைய தினம் ரிலீசாக உள்ள நிலையில், பிரமோஷனுக்காக மும்பை வந்திருந்தார் கபில்தேவ்.

83 படம்

83 படம்

நடிகர் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 83. இந்தப் படம் கடந்த 83ல் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க உலக கோப்பையை முதல்முறையாக கைப்பற்றிய சம்பவத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கபிலாக ரன்வீர்

கபிலாக ரன்வீர்

படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவாக நடித்துள்ளார். பார்க்க கபில்தேவ் போலவே காணப்படுகிறார் ரன்வீர். மேலும் படத்தில் மற்ற வீரர்கள் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் அசலை போலவே இருக்க வேண்டும் என்பதில் படக்குழுவினர் அதிகமாக மெனக்கெட்டுள்ளனர்.

சிறப்பான கேரக்டர் தேர்வு

சிறப்பான கேரக்டர் தேர்வு

மேலும் படத்தில் கேரக்டர் தேர்வு மட்டுமின்றி ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக படமாக்க மெனக்கெட்டிருப்பது நன்றாக தெரிகிறது. படத்தின் டீசர், ட்ரெயிலர் மட்டுமின்றி போஸ்டர்கள் உள்ளிட்டவையும் சிறப்பாக அமைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

நாளைய தினம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பிரீமியரில் முன்னாள் இந்திய கேப்டனும், 83ன் உலக கோப்பை வெற்றியை சாத்தியப்படுத்தியவருமான கபில்தேவும் கலந்து கொண்டார்.

பிரீமியர் ஷோவில் கபில்

பிரீமியர் ஷோவில் கபில்

இதில் படத்தின் ஹீரோ ரன்வீர் சிங், தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். பிரீமியருக்கு வந்திருந்த கபில்தேவ், சிறப்பான லுக்கில் இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

குடுமியுடன் ரீலும் ரியலும்

குடுமியுடன் ரீலும் ரியலும்

மேலும் அவர் சிறிய அளவிலான குடுமியுடன் காணப்பட்டார். இதேபோல படத்தின் ஹீரோ ரன்வீர் சிங்கும் வெள்ளை நிற கோட் சூட்டில், சிறிய அளவிலான குடுமியுடன் காணப்பட்டார். 83 உலக கோப்பை வெற்றியின் ரியல் ஹீரோ மற்றும் ரீல் ஹீரோ இருவரும் ஒரே கெட்டப்பில் இருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X