சூது கவ்வும் ரிலீசாகி 8 வருஷம் ஆகுது.. விஜய்சேதுபதி, அசோக் செல்வன் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தின சிறப்புத் திரைப்படமாக வெளியானது சூது கவ்வும்.

Recommended Video

சூது கவ்வும் பாத்துட்டு கமல் சார் கூப்டாங்க | ACTOR ASHOK SELVAN INTERVIEW | FILMIBEAT TAMIL

விஜய்சேதுபதி, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் இன்றுடன் ரிலீசாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனை முன்னிட்டு நடிகர் விஜய்சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்ட நடிகர்கள் பதிவிட்டுள்ள ட்வீட்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

சூது கவ்வும்

சூது கவ்வும்

கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி என குறும்பட இயக்குநர்களுடன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணமானார் நடிகர் விஜய்சேதுபதி. கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் நடிகர் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியை கொடுத்தது.

காசு பணம் துட்டு மணி

காசு பணம் துட்டு மணி

கர்ணன், எஞ்ஜாய் என்சாமி என கலக்கி வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் சூது கவ்வும் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதிலும், கானா பாலா பாடிய "காசு, பணம், துட்டு, மணி, மணி" பாடல் இன்றும் 7 அப் விளம்பரத்திற்கு பயன்படும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து நிற்கிறது.

8 வருஷம் ஆகிடுச்சு

8 வருஷம் ஆகிடுச்சு

விஜய்சேதுபதியின் சூது கவ்வும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. அந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் சூது கவ்வும் பட ரசிகர்கள் #8YrsOfSoodhuKavvum என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். விஜய்சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலருக்கும் இந்த படம் மிகப்பெரிய பிளாட்ஃபார்மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன் நன்றி

அசோக் செல்வன் நன்றி

சூது கவ்வும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், தான் திரைத் துறைக்கு வந்து இன்றுடன் 8 ஆண்டுகள் ஆகின்றன என சூது கவ்வும் படத்தில் நடித்த காட்சியை பகிர்ந்து அந்த படத்திற்கும் படக் குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே மற்றும் தீனி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

விஜய்சேதுபதி ட்வீட்

விஜய்சேதுபதி ட்வீட்

லாபம் பட இயக்குநர் ஜனநாதன் மறைவு மற்றும் கவண் பட இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவு என தொடர்ந்து சோகத்தில் இருந்து வந்த நடிகர் விஜய்சேதுபதி, சூது கவ்வும் படம் ரிலீசாகி 8 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்து அந்த ஹாஷ்டேக்கை பதிவிட்டு ஸ்மைலி ஒன்றை பதிவிட்டுள்ளார். விஜய்சேதுபதி ரசிகர்கள் பலரும் சூது கவ்வும் படம் குறித்த கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X