நீதிமன்ற சம்மனை நயன்தாராவுக்கு அனுப்பி வைத்தது நடிகர் சங்கம்!

By Chakra

Nayanthara
நயன்தாராவுடன் கள்ளத் தொடர்பில் உள்ள கணவர் பிரபுதேவாவுடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்லத் வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நயன்தாராவுக்கு அனுப்பி வைத்தது நடிகர் சங்கம்.

கள்ளக் காதலர்களாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதற்கு பிரபுதேவா மனைவி ரம்லத் எதிர்ப்பு தெரிவித்தார். குடும்ப நல நீதிமன்றத்தில் பிரபுதேவா தன்னோடு சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டுமென வழக்கும் தொடர்ந்தார்.

கணவனை தன்னுடன் வாழ விடாமல் தடுக்கிறார் என்று நயன்தாராவையும் மனுவில் சேர்த்தார் ரம்லத். மேலும் பிரபுதேவா பெயரில் உள்ள சொத்துக்களை விற்க தடை விதிக்க வேண்டுமென்றும் இன்னொரு மனுதாக்கல் செய்து இருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு சம்மன் அனுப்பினார். இருவரும் ஆஜராகவில்லை. நயன்தாராவுக்கான சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வாங்க மறுத்து விட்டனர். எனவே சம்மன் திரும்பவும் கோர்ட்டுக்கே வந்தது.

இதையடுத்து இரண்டாவது சம்மனை கோர்ட்டு மூலமும் தனிப்பட்ட முறையிலும் ரம்லத் சார்பில் வற்புறுத்தப்பட்டது. அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

நயன்தாராவுக்கான 2-வது சம்மனும் நடிகர் சங்க மானேஜர் பெயருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அனுப்பி வைக்கப்பட்டது. அதனை நடிகர் சங்க மானேஜர் பெற்றுக் கொண்டார்.

நடிகர் சங்க வக்கீலுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவை மதித்து சம்மனை கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள நயன்தாரா வீட்டு முகவரிக்கு பதிவு தபாலில் நடிகர் சங்கம் அனுப்பி வைத்தது.

பிரபுதேவாவுக்கான சம்மன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுபடி 23-ந்தேதி நேரில் ஆஜராவதா? அல்லது வக்கீலை ஆஜராக செய்வதா? என்று பிரபுதேவாவும் நயன்தாராவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வழக்கு முடியும் வரை நயன்தாராவும், பிரபுதேவாவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் ரம்லத் வக்கீல் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதையும் மீறி இருவரும் துபாயில் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X