கிறிஸ்துமஸையொட்டி தமிழில் ரிலீசாகும் அதிகமான புதிய படங்கள்... சூப்பரப்பு!

சென்னை : இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் தொடர்ந்து புத்தாண்டு வரவுள்ளது. மக்கள் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

தீபாவளிக்கு திரையரங்குகளில் 2 படங்கள் மட்டுமே ரிலீசானது.

ஆனால் தற்போது கிறிஸ்துமஸையொட்டி அதிகமான படங்கள் தமிழில் ரிலீசாக உள்ளது.

திரையரங்குகளில் படங்கள்

திரையரங்குகளில் படங்கள்

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் திரையரங்குகள் மூடப்பட்டன. மக்களுக்கு ஓடிடி என்பது திரையரங்குகளுக்கு ஒரு மாற்றாக இருந்தாலும் திரையரங்குகளில் பார்க்கும் அனுபவத்தை அது அளிக்க முடியாது என்பதே உண்மை.

திறக்கப்பட்ட திரையரங்குகள்

திறக்கப்பட்ட திரையரங்குகள்

இந்நிலையில் தற்போது கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் அது மட்டுப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு அதிகமான படங்கள் ரிலீசாகி வருகின்றன. இதனால் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர்.

தீபாவளி ரிலீஸ் படங்கள்

தீபாவளி ரிலீஸ் படங்கள்

தீபாவளியையொட்டி அண்ணாத்த மற்றும் எனிமி படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வசூலை பெற்ற நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி வருகின்றன. கடந்த மாதம் 25ம் தேதி ரிலீசான மாநாடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து இன்றைய தினம் 25 நாளை எட்டியுள்ளது.

தி மாட்ரிக்ஸ் ரீசரக்ஷன்ஸ் படம்

தி மாட்ரிக்ஸ் ரீசரக்ஷன்ஸ் படம்

இந்நிலையில் வரும் கிறிஸ்துமஸையொட்டி 9 படங்கள் தமிழில் ரிலீசாக உள்ளன. முன்னதாக வரும் 22ம் தேதி தி மாட்ரிக்ஸ் ரீசரக்ஷன்ஸ் படம் வெளியாக உள்ளது. சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியாக உள்ள இந்தப் படம் கடந்த 2003ல் வெளியான மாட்ரிக்ஸ் ரிவெல்யூஷன்ஸ் படத்தின் இரண்டாவது பாகமாக வெளியாக உள்ளது.

ராக்கி படம்

ராக்கி படம்

அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ராக்கி படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

அடுத்ததாக ஆனந்தம் விளையாடும் வீடு படமும் கிறிஸ்துமசையொட்டி வெளியாக உள்ளது. பேமிலி என்டர்டெயினராக இந்தப் படம் உருவாகியுள்ளது. கௌதம் கார்த்திக், சேரன், சரணவனன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்தப் படம் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ளது.

83 படம்

83 படம்

கடந்த 83ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 83 படம் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. விளையாட்டை மையமாக கொண்டு வெளியாகும் படங்கள் சிறப்பான வெற்றியை பெறும் நிலையில் இந்தப் படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

எதிர்பார்ப்பில் டைட்டர் படம்

எதிர்பார்ப்பில் டைட்டர் படம்

பா ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ரைட்டர். அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் படத்தை இயக்கியுள்ளார். காவல் நிலையத்தில் பணியாற்றும் எழுத்தர்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்யும் இந்தப் படம் 24ம் தேதி ரிலீசாக உள்ளது.

ஷ்யாம் சிங்கா ராய் படம்

ஷ்யாம் சிங்கா ராய் படம்

அடுத்ததாக நானி, சாய் பல்லவி, மடோனா சபாஸ்டியன், கிரீத்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஷ்யாம் சிங்கா ராய் படமும் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ளது. ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை

அடுத்ததாக சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படமும் வரும் 24ம் தேதி கிறிஸ்துமஸையொட்டி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் ருத்ரா, சுபிக்ஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தை இயக்கியுள்ளார் மகேஷ் பத்மனாபன். இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிப்பரப்பப்பட்டு அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் படம்

மீண்டும் படம்


அடுத்ததாக அஜித்தின் சிட்டிசன் படப்புகழ் சரவணன் சுப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள மீண்டும் படமும் கிறிஸ்துமஸையொட்டி வெளியாக உள்ளது. படத்தில் கதிரவன், அனகா, பிரணவ் ராயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். நரேன் பாலகுமாரன் இசையமைத்துள்ளார்.

தள்ளிப் போகாதே படம்

தள்ளிப் போகாதே படம்

அடுத்ததாக தள்ளிப் போகாதே படமும் கிறிஸ்துமஸையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி முதல் வாரத்தில் இந்தப் படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கண்ணன்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

படங்களை திரையரங்குகளில் பார்க்க முடியாத ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்த நாட்களில் 9 படங்கள் ரிலீசாக உள்ளது அவர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. இதில் ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட் என படங்கள் ரிலீசாக உள்ளதும் சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X