90 ML release: சிம்பு மாதிரியே அதிரடி முடிவு எடுத்த ஓவியா!
ஓவியா நடித்துள்ள 90 எம்எல் திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது.
Recommended Video

சென்னை: தனது 90 எம் எல் பட ரிலீசன்று அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகை ஓவியா.
களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமான போதும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை ஓவியா. ரசிகர் மன்றங்கள் மட்டுமல்ல ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.
பிக் பாஸ் இரண்டாவது சீசனே முடிவடைந்து விட்ட பிறகும், ஓவியா மீதான கிரேஸ் மட்டும் ரசிகர்களிடம் இன்னமும் குறையாமல் உள்ளது.இதனால் அவரது 90 எ எல் படத்தை அவர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

சர்ச்சை டிரெய்லர்
நடிகர் சிம்பு இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மிகவும் ஆபாசமாக இருந்ததால் பெரும் சர்ச்சைகளில் சிக்கியது. ஆனால் டிரெய்லரை பார்த்துவிட்டு, முழு படத்தின் கதையும் இப்படி தான் இருக்கும் என நினைக்காதீர்கள் என ஓவியாவும் அப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப்பும் தெரிவித்திருந்தனர்.

90 எம்எல் ரிலீஸ்
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இம்மாதம் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடவே, அன்றைய தினம் அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பு ஸ்டைல்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தா ராஜாவாதான் வருவேன் பட ரிலீஸின் போது அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்தித்தார் சிம்பு. தற்போது ஓவியாவும் சிம்பு பாணியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் கூடுகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவரை பார்ப்பதற்காகவே அதிகளவில் கூட்டம் கூடுகிறது. அந்த வகையில் ஓவியாவின் இந்த அறிவிப்பால் 90 எம்எல் திரைப்படத்தின் அதிகாலை காட்சியில் நிச்சயமாக கூட்டம் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











