90 ml teaser:ஓவியா ஆர்மியாவே இருந்தாலும்.. ப்ளீஸ் 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த டீசரை பார்க்காதீங்க!
ஓவியா நடித்துள்ள 90 எம்எல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: ஓவியா நடித்துள்ள 90 எம்எல் படத்தின் டீசர் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்துள்ள படம் 90 எம்எல். முழுக்க முழுக்க பெண்ணியம் பற்றி பேசும் இந்த படத்தை அனீதா உதீப் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.
அன்சூன் பால், மசூம் சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள், எதற்கெல்லாம் ஆசைப்படுகிறார்கள் என்பதை மையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

லிப் லாக்:
இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நைட் பார்ட்டி, மது, சிகரெட், இரட்டை அர்த்த வசனங்கள் என இப்படத்தில் எல்லாமே இருக்கிறது. அதுவும் ஓவியாவின் லிப் லாக் காட்சி உச்சத்திலும் உச்சமாக இடம்பெற்றுள்ளது.

அடல்ட்ஸ் ஒன்லி:
'அடல்ட்ஸ் ஒன்லி' கார்டு போட்டு தான் டீசரை ஆரம்பிக்கிறார்கள். அதற்கு பிறகு வருவதெல்லாம், விவரிக்க முடியாத வில்லங்கங்கள். டீசரில் போடப்படும் நான்கு ரவுண்டுக்குள், பார்வையாளர்களை போதையாக்கி விடுகிறார்கள்.
ஆபாசம்:
"செம்மையா மேட்டர் பண்ணி கரெக்ட் பண்ணிடு", ''மேலல்லாம் ஓகே, கீழே இறங்கி வேலை செய்ய மாட்டாங்களா ", "சரக்கடிச்சா அழுறீங்கன்னு தான கஞ்சாவுக்கு மாறுனோம் ", இப்படி டீசரில் வரும் வசனங்களையே காது கொடுத்து கேட்க முடியவில்லை.
கண்டனம்:
மொபைலில் டீசரை பார்க்கும் போது, அருகில் யாராவது இருக்கிறார்களா என சுற்று முற்றும் பார்த்து எச்சரிக்கை செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு ஆபாசம் இருக்கிறது. இந்த டீசரை பார்த்துவிட்டு பலரும் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். இது நிச்சயம் பெரிய பிரச்சினையை கிளப்பும் என்றே எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











