வாழைப்பழம், கஞ்சா, தேன்: ஓவியா பட்ட கஷ்டம் எல்லாம் இப்படி வீணாப் போச்சே!

By Siva

சென்னை: 90 எம்.எல். மற்றும் தடம் படங்களை ஆன்லைனில் கசிய விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் நேற்று வெளியானது. படத்தில் கவர்ச்சியும், இரட்டை அர்த்த வசனங்களும் தூக்கலாக உள்ளது என்று விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் ஓவியாவின் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

90 எம்.எல்.

90 எம்.எல்.

90 எம்.எல். படத்தை ஆன்லைனில் கசிய விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அதுவும் ஹெச்.டி. பிரிண்ட்டில் படம் கசிந்துள்ளது. வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கூட தமிழ் ராக்கர்ஸில் படத்தை பார்த்துவிடுவார்கள்.

ஓவியா

ஓவியா

வார இறுதி நாட்களை மனதில் வைத்து தான் 90 எம்.எல். படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டிருப்பார்கள். இந்நிலையில் வசூலில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

அருண் விஜய்

அருண் விஜய்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடம் படமும் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துள்ளது. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுந்த நிலையில் படம் இப்படி கசிந்துவிட்டதே.

தீர்வு

தீர்வு

புதுப்படங்கள் ரிலீஸாகி சில மணிநேரத்திலேயே அதை ஆன்லைனில் கசிய விடுகிறது தமிழ் ராக்கர்ஸ். இதனால் கஷ்டப்பட்டு படத்தை எடுப்பவர்கள் தான் பதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வே இல்லையா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X