யாரைப் பற்றி சிம்பு இப்படி சொல்லியிருக்கிறார்?
சென்னை: 90 எம்.எல். படத்தில் சிம்பு பேசிய வசனத்திற்கான அர்த்தம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்து துப்புபவர்கள் துப்பினாலும் என்ஜாய் பண்ணுபவர்கள் பண்ணத் தான் செய்கிறார்கள்.

வேறு மாதிரியான படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்துள்ளது. படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் வந்ததை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
படத்தில் சிம்பு, உண்மையா இரு, அவ உனக்கு கிடைப்பா.. ஆனால் கெடச்ச பிறகு இருக்காதே, அப்புறம் அவ வேற எவனுக்காவதும் கிடைப்பா என்று பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.
சிம்பு பேசிய வசனத்தை பார்த்துவிட்டு அவரின் ரசிகர்கள் மரண மாஸ் என்கிறார்கள். ஆனால் அந்த வசனம் யாரைப் பற்றி என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications