மீண்டும் ஹீரோவாகும் 90’ஸ் பிரபலம்: ரீ-என்ட்ரி எப்படி இருக்கப் போகுதுன்னு மட்டும் பாருங்க!
சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்கள் மூலம் கவனம் புகழ் பெற்றவர் பாண்டியராஜன்.
இயக்குநராகவும் நடிகராகவும் பாண்டியராஜனின் திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றன.
இறுதியாக ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்த பாண்டியராஜன், மீண்டும் மாஸாக ரீ-என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டார்.

கன்னிராசி
1985ல் பிரபு, ரேவதி நடிப்பில் வெளியான 'கன்னிராசி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாண்டியராஜன். தொடர்ந்து 'ஆண்பாவம்' படத்தை இயக்கிய அவர், இதில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் ஹீரோ மெட்டிரியல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்த சில மரபுகளை, தனது அப்பாவித்தனமான திருட்டு முழியால் உடைத்ததில் பாண்டியராஜனுக்கும் பெரும் பங்குண்டு.

சொல்லி அடித்த ஆண்பாவம்
அந்த வகையில் பாண்டியராஜன் ஹீரோவாக நடித்த 'ஆண்பாவம்' திரைப்படம் கில்லி மாதிரி சொல்லி அடித்தது. காமெடியே பாண்டியராஜனின் பெரிய பலமாக இருந்ததால், அதையே தனது படங்களில் கொண்டு வந்து சூப்பர் ஹிட்கள் கொடுத்தார். அதேபோல், சென்டிமெண்ட் காட்சிகளிலும், ரசிகர்களை கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்து விடுவார்.

டாப் கியரில் மாஸ்
பாண்டியராஜனின் படங்களுக்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தன, முதலுக்கும் மோசமில்லாமல் கலெக்ஷனிலும் கலக்கின. மனைவி ரெடி, கதாநாயகன், ஆயுசு நூறு, பாட்டி சொல்லை தட்டாதே, வாய் கொழுப்பு, கோபாலா கோபாலா என பாண்டியராஜனின் படங்கள், ஹிட் அடித்தன. அதேநேரம், அவர் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டினார்.

அஞ்சாதே டூ அண்ணாத்த
காமெடி ரூட்டில் சென்றுகொண்டிருந்த பாண்டியராஜன், திடீரென 'அஞ்சாதே' படத்தில் வில்லனாகவும் நடித்து பிரமிக்க வைத்தார். மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படத்தில், பாண்டியராஜனின் மற்றொரு திறமையும் வெளிச்சத்துக்கு வந்தது. இறுதியாக அவர், ரஜினியுடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.

ரீ-என்ட்ரின்னா இப்படி இருக்கணும்
இந்த நிலையில், பாண்டியாராஜன் மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் டைட்டில் முடிவாகாத இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கார்த்திக் சிவன் இந்தப் படத்தை இயக்கவிருப்பதும் தெரியவந்துள்ளது. விரைவில் இதுகுறித்து மேலும் சில அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications