twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    90K கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ ஜேசன் திடீர் தற்கொலை..பவர் ரேஞ்சர்ஸ் மூலம் புகழ்பெற்றவரின் சோக முடிவு

    |

    ஆஸ்டின்: 90 களில் பிறந்தவர்களின் மனம் கவர்ந்த பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் ஜேசன் தனது 49 வது வயதில் தற்கொலை செய்துக்கொண்டார்.

    கலர் தொலைக்காட்சி அதிக அளவில் பரவிய நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களில் புதிய புரட்சி உருவாகிய 90 களில் பவர் ரேஞ்சர்ஸ் பிரபலமான தொடராக இருந்தது.

    உலகை அழிக்க வரும் தீய சக்திகளை பவர் ரேஞ்சர்ஸ் குழுவினர் அழிப்பார்கள். இது சாகச சீரீஸ் என்பதால் 90கே, 2கே கிட்ஸ்கள் இடையே பிரபலமானது.

     LOTR: என்ன சொல்றீங்க 5000 கோடி பட்ஜெட்டா.. ரிங்ஸ் ஆஃப் பவர் வெளியான 2 எபிசோடுகள் எப்படி இருக்கு? LOTR: என்ன சொல்றீங்க 5000 கோடி பட்ஜெட்டா.. ரிங்ஸ் ஆஃப் பவர் வெளியான 2 எபிசோடுகள் எப்படி இருக்கு?

     90 களில் உலகில் ஏற்பட்ட தொலைக்காட்சி புரட்சி

    90 களில் உலகில் ஏற்பட்ட தொலைக்காட்சி புரட்சி

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் 90 களில் ஒரு புரட்சி ஏற்பட்டது. கேபிள் மூலம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கும் முறை உலகெங்கும் பரவியது. வெளிநாட்டு தொலைக்காட்சித்தொடர்கள் இந்தியாவிலும் ஒளிபரப்பானது. இதனால் 90 களில் பிறந்த குழந்தைகள், 2000 த்தில் பிறந்த பிறந்தவர்களுக்கு பல சுவாரஸ்யமான தொடர்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் சக்திமான் போன்ற தொடர்கள் பிரபலமானது. அதேபோல் பவர் ரேஞ்சர்ஸ் எனும் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது.

     90-களில் ஆதிக்கம் செலுத்திய தொலைக்காட்சித்தொடர் பவர் ரேஞ்சர்ஸ்

    90-களில் ஆதிக்கம் செலுத்திய தொலைக்காட்சித்தொடர் பவர் ரேஞ்சர்ஸ்

    உலகை அழிக்க வரும் நாச சக்திகளை பவர் ரேஞ்சர்ஸ் குழுவினர் முறியடிப்பார்கள். இந்த குழுவில் பலவிதமான வண்ணங்களில் உடைகள் அணிந்து நடிப்பவர்கள் அவர்கள் உடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டார்கள். ரெட் ரேஞ்சர், வைட் ரேஞ்சர், கிரீன் ரேஞ்சர், பிளாக் ரேஞ்சர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் செய்யும் ஸ்டண்டுகள் அதிரடியாக இருக்கும். இதற்காக மார்ஷியல் ஆர்டிஸ்டுகளை தேர்வு செய்து நடிக்க வைத்தனர். ஆயுதங்களும் வித்தியாசமாக இருக்கும். இந்நிலகழ்ச்சிகள் குழந்தைகள் மிகவும் கவர்ந்தது.

     குழந்தைகளின் மனதை ஆட்டிப்படைத்த பவர் ரேஞ்சர்ஸ்

    குழந்தைகளின் மனதை ஆட்டிப்படைத்த பவர் ரேஞ்சர்ஸ்

    பவர் ரேஞ்சர்ஸை பார்த்து அதேபோல் குழந்தைகள் வண்ண உடைகள் அணிந்து பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதும், ரெடிமேட் டிரஸ்கள் பவர் ரேஞ்சர்ஸ் கலரில் விற்கப்பட்டதும் அப்போது பிரபலம். குழந்தைகளை எந்நேரமும் கட்டிப்போட்ட பவர் ரேஞ்சர்ஸ் உலகெங்கிலும் குழந்தைகளின் சூப்பர் ஹீரோவாக இருந்தனர், அப்படிப்பட்ட பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் குழந்தைகளின் மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோவாக இருந்தவர் ஜேசன் டேவிட் ஃபிராங்க். புகழ்பெற்ற நடிகர், மார்ஷியல் ஆர்டிஸ்ட். கிரீன் ரேஞ்சர் பின்னர் ஒயிட் ரேஞ்சராக நடித்து புகழ்பெற்றார்.

     உலக குழந்தைகளின் சூப்பர் ஹீரோவின் சோக முடிவு

    உலக குழந்தைகளின் சூப்பர் ஹீரோவின் சோக முடிவு

    அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகர் ஜேசன் பிராங். இவர் 90 களில் புகழ்பெற்ற கிரீன் ரேஞ்சர் டாமி ஆலிவர் பாத்திரத்தில் நடித்தார். மொத்தம் 14 எபிசோடுகளாக இது வந்தது. JDF என கிரீன் ரேஞ்சராக புகழ்பெற்ற அவரை மீண்டும் வெள்ளை ரேஞ்சராகவும், பவர் ரேஞ்சர்ஸ் அணியின் புதிய தலைவராக வைத்து தொடர் வெளியானது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஜேசன் பிராங் பிரபலமானார். ஜேசன் நடிகர் மட்டுமல்ல புகழ்பெற்ற மார்ஷியல் ஆர்டிஸ்டாவும் இருந்தார். தற்காப்பு கலையில் பல விருதுகளை பெற்றவர் ஜேசன்.

     இருமுறை மணம், விவாகரத்து செய்து மனைவி பிரிந்ததால் சோகம்

    இருமுறை மணம், விவாகரத்து செய்து மனைவி பிரிந்ததால் சோகம்

    புகழின் உச்சியில் இருந்தபோது 1994 ஆம் ஆண்டு ஷவ்னா என்பவரை மணந்தார். 2001 ஆம் ஆண்டு விவகாரத்தான நிலையில் மீண்டும் 2003 ஆம் ஆண்டு டாமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிராங்க் தனக்கு துரோகம் செய்ததாக கூறி இந்த ஆண்டு செப்டம்பரில் விவாகரத்து செய்தார் டாமி. அதுமுதல் சோகத்தில் இருந்த ஜேசன் பிராங் தனது திரையுலக நடிப்புத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

     49 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சூப்பர் நட்சத்திரம்

    49 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சூப்பர் நட்சத்திரம்

    இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் அன்றைய குழந்தைகளின் சூப்பர் ஹீரோ ஜேசனின் துரதிர்ஸ்டவசமான சோக முடிவு உலகம் முழுவதிலும் பலரையும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜேசன் குழந்தைகள் நிகழ்ச்சியில் மூன்று சீசன்களில் நடித்தார், மொத்தம் 123 எபிசோடுகள் என பல 'பவர் ரேஞ்சர்ஸ்' திரைப்படங்களில் நடித்தார், அதில் அவர் மீண்டும் ரெட் ரேஞ்சர், பிளாக் ரேஞ்சர் மற்றும் கிரீன் ரேஞ்சர் ஆகிய பாத்திரங்களில் நடித்தார். 49 வயதில் சோக முடிவை அவர் தேடிக்கொண்டுள்ளார்.

    English summary
    The actor and mixed martial artist Jason David Frank, who starred on the television series Mighty Morphin Power Rangers, has died, He was 49 years old.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X