லிப்ரா ரவீந்தரை மணந்த விஜே மகாலக்ஷ்மி.. சோகத்தில் மூழ்கிய 90ஸ் கிட்ஸ்.. பறக்கும் கமெண்ட்ஸ்!
சென்னை: லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றது.
அதன் புகைப்படங்களை இருவரும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்த நிலையில், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.
அதே சமயம், மகாலக்ஷ்மி சன் மியூசிக் விஜேவாக இருந்த காலத்தில் இருந்தே பார்த்து ஜொள்ளு விட்டு வரும் 90ஸ் கிட்ஸ் அவருக்கு திருமணம் ஆகி விட்டதா என புலம்பி ஏகப்பட்ட சோக கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

திருமண வாழ்த்து
திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணமக்களின் புகைப்படங்களை ட்விட்டரில் டிராக்கர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பதிவிட்டு வாழ்த்திய நிலையில், அதற்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சைல்ட்வுட் கிரஷ்
"அடப்பாவிங்கள childhood crush da அவ.. 90kids fav vj டா.. So. Sad.. Money is always ultimate...." என தயாரிப்பாளர் ரவீந்தரை மகாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டதை தாங்க முடியாமல் இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் தனது நண்பருக்கு தெரிந்தால் ஒருவாரம் ரூம் போட்டு அழுவார் என்றும் சொல்லி உள்ளார்.

குழந்தையே இருக்கு
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான விஜே மகாலக்ஷ்மிக்கு இப்போதான் திருமணம் ஆகுதான்னு சில நெட்டிசன்கள் ஷாக் ஆக, "அடப்பாவி இவங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி ப்ரெக்னென்டா சீரியல்லாம் நடிச்சு புள்ளையும் பொறந்து ஸ்கூலுக்கும் போய்ட்டான். இது ரெண்டாவது மேரேஜ் .. இப்ப வந்து என்னது காந்திசெத்துட்டாரான்னு கேக்குற"ன்னு இந்த நெட்டிசன் விளாசித் தள்ளி உள்ளார்.

90ஸ் கிட்ஸ் புலம்பல்
"ஏன்டா கொடுமை படுத்துறீங்க இது எல்லாம் காமிச்சு... நான் எல்லாம் எதுக்கு இருக்கேன்.." என மகாலக்ஷ்மிக்கு இரண்டாவது திருமணம் ஆன ஷாக்கில் இந்த 90ஸ் கிட்ஸ் இளைஞர் புலம்பித் தள்ளி உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல்களையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நெஞ்சே வெடிச்சிடுச்சு
சில ரசிகர்கள் மகாலக்ஷ்மிக்கு இப்போதான் திருமணம் ஆகிறது என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரனை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்றும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி நாயகன் படத்தில் கமல் நெஞ்சை பிடித்துக் கொண்டு அழும் காட்சியை பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். எப்படி இருந்தாலும், உங்க வாழ்க்கை உங்க கையில என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











