ஆஸ்கர் விருது வழங்கும் விழா.. சாதனை படைக்குமா ஆர்ஆர்ஆர்.. நேரலையில் எங்கு பார்க்கலாம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் எதில் பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
95வது அகாடமி விருதுகள் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி, மார்ச் 13 அதிகாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
பிரபல அமெரிக்க தொலைக்காட்சி ஆளுமை ஜிம்மி கிம்மல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

ஆஸ்கர் விருது
திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் 1929ம் ஆண்டு முதல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 'தி ஹாலிவுட் ரூஸ்வெல்ட்' ஹோட்டலில் நடந்து வருகிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்கிற அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது. இதில் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இறுதிசுற்றுக்கு தேர்வான படங்கள்
ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலும், ஆல் தட் ப்ரீத்ஸ், ஆவணப்பட பிரிவிலும், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண குறும்படப் பிரிவிலும் தேர்வாகி உள்ளதால்,ஏதேனும் ஒரு பிரிவில் நிச்சயம் ஆஸ்கரை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் மேடையில்
இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகையாக இருந்து வந்த நடிகை தீபிகா படுகோன் சமீப காலமாக ஹாலிவுட் படங்களிலும் நடித்து பான் வேர்ல்ட் நடிகையாக மாறி உள்ளார். இவர், கான்ஸ் திரைப்பட விழாவில் ஜூரியாக கலந்து கொண்டது நிலையில், ஆஸ்கர் விருது விழாவில், எமிலி பிளண்ட், க்ளென் க்ளோஸ், டுவைன் ஜான்சன் மற்றும் பிற பிரபலங்களுடன் இணைந்து ஆஸ்கார் விருதுகளை வழங்க உள்ளார்.

ஆர்ஆர்ஆர் பாடல் நேரலையில்
இந்தப் பாடல் உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. ஆஸ்கருக்கு இணையான விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இந்த பாடலை ஆஸ்கர் மேடையில், நேரடியாக நேரலையில் ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே பாட உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் அங்கே முகாமிட்டுள்ளனர்.

நேரலையில் எங்கு பார்க்கலாம்!
இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதை இந்தியாவில் உள்ள பார்வையாளர்களுக்காக Disney Plus Hotstarல் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதுதவிர, YouTube, Hulu Live TV, Direct TV, FUBO TV மற்றும் AT&T TV உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











