PSBB மாதிரி தான் எங்க ஸ்கூல்லும்.. அந்த பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டேன்.. மனம் திறந்த '96 ' ஜானு
சென்னை: PSBB மாதிரி தான் எங்க பள்ளியும் என 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன் பகீர் கிளப்பி உள்ளார்.
Recommended Video
பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

பள்ளிகளில் பாலியல் தொல்லை
பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியை போலவே ஏகப்பட்ட தனியார் பள்ளிகளில் இது போன்ற பாலியல் ரீதியான தொல்லைகள் மாணவிகளுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது ஒவ்வொரு பூதமாக சமூக வலைதளங்களில் கிளம்பி வருகின்றன.

பெற்றோர் அமைதி
தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாக இதுபோன்ற பாலியல் தொல்லைகள், இழிவுபடுத்தும் செயல்கள், சாதிய ரீதியான வன்கொடுமைகள் உள்ளிட்ட தவறுகள் நடைபெறும் போது, குழந்தைகளின் பேச்சைக் கேட்காமல் பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பு பறிபோய் விடும் என பயந்து பெற்றோர்கள் அமைதி காத்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

96 ஜானு
PSBB பள்ளி மாதிரி தான் எங்க ஸ்கூல்லும், அது போன்ற பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டேன், என்னை போலவே என்னுடன் படித்த மாணவிகளும் அனுபவித்துள்ளனர் என '96 ' படத்தில் குட்டி ஜானுவாக நடித்த நடிகை கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்ட் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

இந்து சீனியர் செகண்டரி பள்ளி
96, மாஸ்டர் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இளம் நடிகை கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் அடையாறில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் தான் படித்தேன் என்றும், அந்த பள்ளியிலும் இதே போன்ற பாலியல் ரீதியான சீண்டல்கள், மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் என ஏகப்பட்ட தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் மனம் திறந்து கூறியுள்ளார்.

மற்ற மாணவிகளுக்கும்
இதுதொடர்பாக நீண்ட பதிவை இட்டுள்ள நடிகை கெளரி கிஷன், தன்னுடன் படித்த மற்ற மாணவிகள் மற்றும் அந்த பள்ளியில் படித்த மாணவ மாணவிகளிடமும் இதுதொடர்பாக விசாரித்த பின்னரே இந்த பதிவை பதிவு செய்துள்ளதாகவும், மேலும், தற்போது படிக்கும் மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்கவும், உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











