ஆண்மை இல்லையா.. இளையராஜா இசையை திருட்டுத்தனமாக பயன்படுத்தினேனா?.. செய்யாறு பாலுவை விளாசிய இயக்குநர்!
சென்னை: மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் 96 படங்களில் இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக ஆண்மை இல்லையான்னு இளையராஜா திட்டியது போன்ற தலைப்பை பயன்படுத்தி செய்யாறு பாலு வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார்.
மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 160 கோடி ரூபாய் சொல்லி ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இளையராஜா இசையில் உருவான " கண்மணி அன்போடு காதலன்" பாடல் தான் என்பது அனைவருக்கும் தெரியும். கிளைமாக்ஸ் காட்சியிலும் அந்த பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தியதால் தான் படம் வெற்றி பெற்றது.

மேலும் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படம் வரவில்லை என்றால் இப்படி ஒரு படமே வந்து இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே கமல்ஹாசனையும் அந்தப் படத்தை இயக்கிய சந்தான பாரதியையும் சென்னைக்கு வந்து மஞ்சுமெல் பாய்ஸ் குழு சந்தித்து சென்றது.
96 படத்திலும் இளையராஜா பாடல்: விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். ஆனால் அந்த படத்தில் நடிகை திரிஷா தளபதி படத்தில் இடம்பெற்ற " யமுனை ஆற்றிலே" பாடலை பாடுவார். அந்தப் பாடலும் 96 படத்தின் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்யாறு பாலு குற்றச்சாட்டு: பயில்வான் ரங்கநாதன், செய்யாறு பாலு உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் தங்கள் யூடியூப் சேனல்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களையும் பொய்யான தகவல்களையும் பரப்பி வருவதாக சினிமா பிரபலங்களில் சிலர் பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது, செய்யாறு பாலுவின் குற்றச்சாட்டுக்கு 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரேம்குமார் பதிலடி: அன்பிற்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், 96 படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் 7-ஆம் தேதி செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில், " உங்களுக்கு ஆண்மை இல்லையா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்கு புடுங்குற மாதிரி கேட்ட இளையராஜா" என்கிற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. அதில், செய்யாறு பாலு சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018 இல் வெளியான 96 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாத பேசியுள்ளார்.

குறிப்பாக 96 பற்றி பேசும்போது இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல் இன்னொரு வார்த்தை 'பொ' என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க என்றும் பேசியிருந்தார் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.
திரு. செய்யாறு பாலு குறிப்பிட்டுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கும் 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் திங்க் மியூசிக் வாயிலாகவும் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும் இரண்டு படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்று விட்டோம்.

ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்து கொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல் இது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியது ஏன்? ஒரு காணொலியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக் கொடுப்பதா? என பிரேம்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











