மலையாள படத்தில் ஹீரோயின் ஆன குட்டி 'ஜானு': நிஜத்தில் எப்படிபட்டவர் தெரியுமா?
Recommended Video

பெங்களூர்: 96 படத்தில் ஜூனியர் ஜானுவாக நடித்த கவுரி கிஷன் நிஜத்தில் எப்படிப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.
சூப்பர் ஹிட்டான 96 படத்தில் ஜூனியர் ஜானுவாக நடித்து பிரபலமானவர் கவுரி கிஷன். அவர் பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
96 படத்திற்கு பிறகு அந்த கல்லூரியில் கவுரி மிகவும் பிரபலமாகிவிட்டார். அதிலும் குறிப்பாக தமிழக மாணவ, மாணவியர் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

செல்ஃபி
அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் கவுரியுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கவுரியுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே நல்ல உடை அணிந்து செல்கிறார்கள். செல்ஃபி எடுத்தவுடன் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நான் ஜானுவுடன் போட்டோ எடுத்துவிட்டேனே என்று பெருமையாக கூறுகிறார்கள்.

ஜானு
ஒரு ஹிட் படத்தில் நடித்தவர் என்ற பந்தாவே இல்லாதவர் கவுரி. கல்லூரியில் அவரை பார்ப்பவர்கள் இந்த பொண்ணா அந்த படத்தில் நடித்தது. கொஞ்சம் கூட திமிரே இல்லையப்பா என்கிறார்கள். யார் வந்து எப்பொழுது செல்ஃபி கேட்டாலும் முகம் சுளிக்காமல் சிரித்தபடி போஸ் கொடுக்கிறார் கவுரி. அவரின் இந்த குணம் அவருடன் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மிகவும் பிடித்துள்ளது.

மலையாளம்
96 படத்தை அடுத்து கவுரி மலையாள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரின்ஸ் ஜாய் இயக்கும் புதுப்படத்தில் சன்னி வெயின் ஜோடியாக நடிக்க உள்ளார் கவுரி. 96 படத்தை போன்றே இந்த படத்திலும் தனது கதாபாத்திரம் வலுவானதாக இருப்பதால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

மகிழ்ச்சி
ஸ்க்ரிப்ட்டை கேட்டதுமே பிடித்துவிட்டது. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. மேலும் சன்னி சார் ஜோடியாக நடிக்க ஆர்வமாக உள்ளேன். சன்னி படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில், ஸ்டைலில் நடிப்பவர் என்கிறார் கவுரி. கவுரி கேரள மாநிலம் வைக்கமை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











