96 ஜானுவா இப்படி மாறிட்டாங்க.. அந்த இடத்தில் அப்படியொரு டாட்டூ.. மாலத்தீவில் வேறலெவல் மஜா!
சென்னை: 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை கெளரி கிஷன். விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ் என பல படங்களில் நடித்துள்ள கெளரி கிஷன் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
மேகா ஆகாஷ், ரஜினிகாந்த், கெளரி கிஷன் என பல நடிகர்களும் சம்மர் முடிந்தும் இன்னும் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், தனது மார்புக்கு கீழ் நடிகை கெளரி கிஷன் போட்டுள்ள புதிய டாட்டூ பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.
மாலத்தீவில் கெளரி கிஷன்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் உருவாகி வரும் படங்களில் நடித்து வரும் இளம் நடிகை கெளரி கிஷன் ஹோம்லியில் இருந்து கிளாமர் ரூட் பக்கம் திரும்ப தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கே மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு கடற்கரை அருகே அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன.

தோழிகளுடன் டூர்: 96 படத்தில் ஆதித்யா பாஸ்கருக்கு ஜோடியாக இளம் வயது ஜானுவாக ஸ்கூல் பெண் கதாபாத்திரத்தில் செம க்யூட்டாக நடித்த கெளரி கிஷன் தெலுங்கிலும் அதே ரோலில் நடித்திருந்தார்.
மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்த கெளரி கிஷன் தனுஷின் கர்ணன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்நிலையில், இந்த ஆண்டு விடுமுறையை மாலத்தீவுக்கு சென்று கொண்டாட தனது தோழிகளுடன் டூர் சென்றிருக்கும் கெளரி கிஷன் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த இடத்தில் டாட்டூ: பென்சில் படத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி மாணவனாக ஜிவி பிரகாஷ் நடித்து வரும் அடியே படத்தில் பள்ளி மாணவியாக நடித்து வரும் கெளரி கிஷன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில், அங்கே தனது மார்புக்கு கீழ் போட்டிருக்கும் டாட்டூ புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.
ஏற்கனவே தனது கையில் ரைசிங் சன் டாட்டூவை குத்தியுள்ள கெளரி கிஷன் தற்போது ரிப்ஸ் டாட்டூவை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











