காதலே காதலே 96 படத்தில் வாகை சூடிய கார்த்திக் நேத்தாவுக்கு கால்கட்டு போட்டாச்சு
சென்னை: காதலே காதலே பாடலை எழுதிய 96 படப் புகழ் கவிஞர் நேத்தாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான 96 படத்தின் பாடல்கள் கேட்க கேட்க இனிமையானவை. அந்த பாடல்களின் வரிகளுக்கு சொந்தக்காரர் கார்த்திக் நேத்தா. இப்படத்திற்காக 2018ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார்.

மேலும் நெடுஞ்சாலை, திருமணம் எனும் நிக்காஹ் படங்களின் பாடல்களையும் எழுதியவர் இவர் தான். இவரின் தனித்துவமிக்க பாடல் வரிகளுக்கு பின்னால் ஒரு ஆசான் இருக்கிறார்.
அவர் தான் நமது புகழ் பெற்ற மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார். பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம் உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் கார்த்திக் நேத்தா. அதனால் நா.முத்துக்குமாரின் தாக்கம் இவரிடமும் இருப்பது இயல்பு தானே.
96 படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததால் அதன் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நேத்தாவிற்கு நிறைய திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

கடந்த 2011ஆம் ஆண்டில் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா படத்தில் கவிஞர் வைரமுத்து எழுத்தில் சின்மயி பாடிய சர சர சார காத்து வீசும் போது பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய ஒரு பாடல்.
அந்த பாடலை எழுதியது நான் தான் என்றும் அதில் சில வரிகளை மற்றும் கவிகள் வைரமுத்து மாற்றிவிட்டு அது தனது பாடல் என்கிறார் என்று கார்த்திக் நேத்தா சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











