96 படம் அதோட க்ளைமாக்ஸ்னால தான் பெஸ்ட்... வர்ஷா பொல்லம்மா பரபர
சென்னை : 96 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் அழகான அனைவரையும் கவரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வர்ஷா பொல்லம்மா.
Recommended Video
இவர் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
இதில் ரசிகர் ஒருவரின் 96 படத்தின் க்ளைமாக்ஸ் குறித்த கேள்விக்கு வெளிப்படையான பதிலை அளித்துள்ளார்.

மெல்லிய காதல்
96 திரைப்படம் மெல்லிய காதலை மையமாக கொண்டு கடந்த 2018 வெளியாகி ரசிகர்களின் பள்ளிக் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பிய படம். பள்ளி காலகட்டத்தில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் காதல் மற்றும் அது நிறைவேறாத சோகம் உள்ளிட்டவற்றை கண்முன்னே கொண்டு வந்திருந்தார் இயக்குநர் பிரேம்.

சிறப்பான நடிப்பு
இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். சிறுவயது கேரக்டர்களில் நடித்திருந்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அனைவரும் சேர்ந்து காதலை அது கொடுத்த வலியை சிறப்பாக திரையில் கொண்டுவந்தனர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில்
இந்த படத்தில் சிறிய கேரக்டரில் வந்தாலும் விஜய் சேதுபதியின் மாணவியாக வந்த வர்ஷா பொல்லம்மாவும் அழகிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், படம்குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

க்ளைமேக்சால் சிறப்பு
ரசிகர் ஒருவர் க்ளைமேக்சில் வர்ஷா, விஜய் சேதுபதியை திருமணம் செய்வார் என்று கருதியதாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்த கேள்விக்கு பதிலளித்த வர்ஷா, 96 படம் அதன் க்ளைமேக்சிற்காக மட்டுமே சிறப்பாக பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏராளமானோர் இந்த கேள்வியை தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











