96 சிறந்ததா.. ஜானு சிறந்ததா.. இதுல எது பெஸ்ட்.. உங்க ஒப்பீனியன சொல்லணுங்க !

சென்னை : விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது 96 திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருபவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

சதுரன், வெற்றிவேல், யானும் தீயவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மாவுக்கு 96 திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் 96 திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் அதிலும் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்க இப்பொழுது தனது ரசிகர்களிடம் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 உங்களுக்கு பிடித்து இருக்கிறதா இல்லை, ஜானு பிடித்திருக்கிறதா என கேட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பல விருதுகளை

பல விருதுகளை

அழகான காதல் கதை, ஆழமான அர்த்தங்கள் என சமீபத்தில் வெளியான 96 திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடிய நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, பல விருதுகளை வாங்கி குவித்தது.

மிக எதார்த்தமாக

மிக எதார்த்தமாக

பள்ளி காதலர்கள் நீண்ட நாள் கழித்து கெட்டுகெதரில் சந்திக்க அந்த சந்திப்பின்போது தங்களது பள்ளி கால பழமையான நிகழ்வுகளையும் சிறு வயதில் இருவருக்கும் இருந்த காதலையும் மிக எதார்த்தமாக சொல்லியிருந்த விதத்தில் இந்த திரைப்படம் தனித்துவமாக நிலைத்து நின்று பலரையும் ரசிக்க வைத்ததோடு கொண்டாடவும் வைத்தது.

முக்கியமான கதாபாத்திரத்தில்

முக்கியமான கதாபாத்திரத்தில்

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் இயல்பான நடிப்பில் உருவான 96 திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வர்ஷா பொல்லம்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஜானு

ஜானு

இவ்வாறு தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில்" ஜானு" என்ற பெயரில் ரீமேக் செய்ய அதில் சர்வானந்த் மற்றும் சமந்தா லீட் ரோலில் நடித்து இருந்தனர்.

சர்ச்சைக்குரியவாறு

சர்ச்சைக்குரியவாறு

இந்நிலையில் 96 திரைப்படத்தை பார்த்த பலரும் ஜானு திரைப்படம் 96 போல எதார்த்தமாக இல்லை எனக் கூறி வர இப்பொழுது வர்ஷா பொல்லம்மா சர்ச்சைக்குரியவாறு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

எது சிறந்தது

எது சிறந்தது

அதில் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த இவர் அதே கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் சர்வானந்த் உடன் இணைந்து நடித்து இருக்க இதில் காரில் சென்றவாறு செல்பி எடுக்கின்ற ஒரு காட்சி வரும், அந்த காட்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இதில் 96 சிறந்ததா இல்லை இந்த ஜானு சிறந்ததா என கேட்க ரசிகர்கள் பலரும் தங்களது பதில்களை ஆர்வமாக பதிவிட்டு வருகின்றனர்.

கேலி செய்யாதீர்கள்

கேலி செய்யாதீர்கள்

மேலும் இவ்வாறு பதிவிட்ட வர்ஷா பொல்லம்மா அதில் பின் குறிப்பாக ஆரோக்கியமான கமெண்ட்டுகளை மட்டும் பதிவிடுங்கள், நடிகர்களின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் என சாதுரியமாக பின்குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.

இயல்பாக இருக்கும்

இயல்பாக இருக்கும்

இவ்வாறு 96-யும், ஜானு-வையும் ஒப்பிட்டு பதிவிட்டு இருந்த இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் 96 விஜய் சேதுபதி தான் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் அதில் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கும் மேலும் விஜய் சேதுபதியின் நடிப்பு அதில் மிக இயல்பாக இருக்கும் எனவே 96 தான் எங்களுக்கு பிடிக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: jaanu ஜானு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X