பேண்ட் போடாமல் அந்தரத்தில் பறக்கும் குட்டி ஜானு!
சென்னை : 96 திரைப்படத்தில் நடித்து அறிமுகமான நடிகை கௌரி கிஷான் அனைவராலும் குட்டி ஜானு என அடையாளம் காணப்பட்டார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட மாஸ்டரில் கல்லூரி மாணவியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் கதாநாயகியாக வலம் வரும் கௌரி கிஷான் இப்பொழுது பேண்ட் இல்லாமல் அந்தரத்தில் பறக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

சிறுவயது கதாபாத்திரத்தில்
அதிரடி சண்டைக்காட்சிகள் வில்லன்கள் என எதுவுமே இல்லாமல் மனதுக்கு இதமான காதல் படமாக வெளியான 96 விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிகை கௌரி கிஷான் அழகாக நடித்து தமிழில் அறிமுகமானார். இதில் திரிஷாவை விடவும் அதிகமாக கொண்டாடப்பட்ட கௌரி கிஷானை பலரும் குட்டி ஜானு என அழைத்து வந்தனர்.

அதே கதாபாத்திரத்தில்
96 தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட இதிலும் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்த தெலுங்கிலும் அறிமுகமானார். மலையாளத்தில் மர்கம்கலி, அனுகிரகீதன் ஆண்டனி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து மலையாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.

வெயிட்டான ரோலில்
இவ்வாறு தமிழ்,தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துவரும் கௌரி கிஷான் தமிழ் சினிமாவில் மேலும் 2 முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் கர்ணன் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களிலும் பக்காவாக வெயிட்டான ரோலில் நடித்து பாராட்டுகளையும் பெற்றார்.

பறப்பது நடப்பது
மிக விரைவிலேயே தமிழிலும் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கும் கௌரி கிஷானுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே செல்ல இப்பொழுது பேண்ட் போடாமல் தொடைவரை மறைத்திருக்கும் நீளமான சட்டையை மட்டும் அணிந்து கொண்டு பறப்பது, நடப்பது என வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்து அசத்தியுள்ள புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











