96 படத்தின் கதை சுட்ட கதையா?: இயக்குனர் பிரேம் குமார் விளக்கம்

By Siva

Recommended Video

96 கதை என்னுடையது, பாரதிராஜாவுக்கு இயக்குனர் பிரேம் பதில்

சென்னை: 96 படத்தின் கதை திருடப்பட்டது என்று எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ராம் மற்றும் ஜானுவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் 96 படத்தின் கதை திருடப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

92

92

96 படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் சத்ரியன் புகார் தெரிவித்துள்ளார். 92 என்ற பெயரில் தான் எழுதிய கதையை பிரேம் குமார் அப்படியே திருடி படம் எடுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுரேஷுக்கு பாரதிராஜாவும் ஆதரவு தெரிவித்து அவர் சொல்வது உண்மை என்கிறார்.

பிரேம் குமார்

பிரேம் குமார்

92 படத்தை சுரேஷ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் பிரேம் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 96 படத்தின் கதை திருடப்பட்டது அல்ல, அது தான் சொந்தமாக எழுதியது என்று தெரிவித்தார். மேலும் தான் கதையை உருவாக்கியபோது எழுதப்பட்ட நோட்ஸுகளை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

கதை

கதை

96 படத்தின் கதை தன்னுடையது என்பதற்கான ஆதாரத்தை செய்தியாளர்களிடம் காண்பித்துள்ளார் பிரேம் குமார். மேலும் கதை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சுரேஷ் கூறிய புகாரில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார் பிரேம் குமார். மேலும் பாரதிராஜா இந்த விவகாரம் தொடர்பாக தன்னை அசிங்கமாக திட்டியதால் வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தவறு

தவறு

பாரதிராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் இப்படி கொச்சை வார்த்தைகளால் என்னை திட்டியுள்ளார். கதை அவர்களுடையது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல். இந்நிலையில் இப்படி என்னை திட்டியது தவறு. இதற்கு எனக்கு பதில் அளித்தாக வேணடும் என்கிறார் பிரேம் குமார்.

புகார்கள்

புகார்கள்

96 படம் வெளியான ஒரு வாரத்திலேயே கதை தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் உலாவத் துவங்கியது. படம் வெற்றி பெற்ற பிறகே பிரச்சனைகள் வரத் துவங்கியது. இந்த காரணத்தால் என்னால் படத்தின் வெற்றியை கொண்டாட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் பிரேம் குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X