96 படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து: ரிலீஸுக்காக ரூ. 4 கோடி கொடுத்த விஜய் சேதுபதி
Recommended Video

சென்னை: கேடிஎம் பிரச்சனையால் விஜய் சேதுபதியின் 96 படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 96 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை காட்சியை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர்களில் அறிவிப்பு வெளிட்டதை கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

96
கேடிஎம் பிரச்சனையால் 96 படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர மழை வேறு பெய்து கொண்டிருக்கிறது. கேடிஎம் பிரச்சனையால் புதுப் படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்படுவது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காண்பது படங்களுக்கு நல்லது.

விஜய் சேதுபதி
96 படம் ரிலீஸாக விஜய் சேதுபதி தனது சம்பளத்தில் ரூ. 3 கோடியை விட்டுக் கொடுத்துள்ளார். மேலும் பட ரிலீஸுக்காக தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 1 கோடி அளித்துள்ளார். ஒரு ஹீரோ தனது படத்தின் பிரச்சனை தீர தாமாக முன்வந்து பணம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பாராட்டுக்கள் மக்கள் செல்வன்.

அதிகாலை காட்சி
கேடிஎம் பிரச்சனை கடைசி நிமிடத்தில் வந்திருக்காது. பட ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பே என்.ஓ.சி. வாங்க வேண்டும். அதனால் ரசிகர்கள் அதிகாலை காட்சிக்கு டிக்கெட் புக் செய்யும் முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் தான் பாவம் ஆசையோடு சென்று ஏமாந்துள்ளனர்.

இமைக்கா நொடிகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தின் அதிகாலை காட்சிகளும் நிதி பிரச்சனையால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் கஷ்யப் நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் அதிகாலை காட்சியும் ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக விஜய்யின் சர்காருக்கும் இப்படி ஏதாவது நடந்துவிடாமல் இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications











