96 படத்தின் கிளைமாக்ஸ் இது தான்... 100வது நாள் வெற்றி விழாவில் ரகசியம் உடைத்த விஜய் சேதுபதி, திரிஷா!
96 படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த படம் '96'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 100-வது நாள் விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அந்த விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய பார்த்திபன், விஜய் சேதுபதியையும், த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து, இருவரையும் கட்டிப்பிடிக்கச் சொன்னார். அதனைத் தொடர்ந்து காதலே காதலே' பாடலின் பிஜிஎம் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டனர். அப்போது, இதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்" என்றார் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











