96 ஜோடி நடிக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. அதை கவனிச்சீங்களா?

சென்னை: '96 ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'லவ் அண்ட் வார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‌ இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் அண்ட் வார்' திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கும் இந்த ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணா பாஸ்கர் தயாரித்திருக்கிறார்.

96 Pair Adithya Bhaskar amp amp Gouri G Kishan s Love and War First Look Unveiled Fans Spot the Chemistry

கதை: படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு தேநீர் பருகும் கால அவகாசத்திற்குள் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டிய விசயத்தை 'ஈகோ'வினாலும், கோபத்தினாலும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி.., உறவுகளை இழந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும்.. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ரோம் - காம்: இந்த படத்தை திரையரங்குகளில் காணும் போது.. ரசிகர்கள் தங்களின் கவலைகள் மறந்து, வயிறு வலிக்க சிரித்து, ரசித்து, தங்களது கடந்த கால நினைவுகளை நினைத்து கொள்வதுடன்.. தங்களை புதுப்பித்துக் கொண்டு உற்சாகத்துடன் கொண்டாட விரும்புவர்களுக்கான படம் இது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு முன், விடை தெரியாத கேள்விகள் பலருக்கு இருக்கும். அதற்கான பதில் இப்படத்தை பார்த்தால் கிடைக்கும்.

96 Pair Adithya Bhaskar amp amp Gouri G Kishan s Love and War First Look Unveiled Fans Spot the Chemistry

போஸ்டர்: 'லவ் அண்ட் வார் ' படத்தில் நடித்திருக்கும் கௌரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் ஜோடி.. திரையில் அற்புதமான கெமிஸ்ட்ரி மூலம் மேஜிக் செய்து ரசிகர்களை வசப்படுத்துவார்கள்'' என்றார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில்.. இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோரது தோற்றம்... அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால்.. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X