‘ஜானு‘ 96 தெலுங்கு ரீமேக் டிரைலர்.. டிரெண்டிங்கில் !
சென்னை : 96 படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ஜானு படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டாகி உள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷான், தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருந்தனர் .

96 என்றவுடன் நமது நினைவுக்கு வருவது த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் தான் . பள்ளி பருவ காதல் அதற்கு பின் ஏற்படும் பிரிவு பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் காதலர்கள் அவர்களுக்குள் இருக்கும் காதல் அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை மீண்டும் பிரிவு என ஒரு இருக்கமான காதல் படம் தான் 96.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது இந்த 96 படம். தற்போது இயக்குனர் பிரேம் குமார் 96 படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் . தெலுங்கு வெர்சனில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சார்வனந்த் நடிக்கிறார் இவர் தமிழில் 'எங்கேயும் எப்போதும்' மற்றும் 'ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' படங்களில் நடித்தவர்.
தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் தெலுங்கிலும் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழில் திரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயர் ஜானு அதனையே தெலுங்கு படத்தில் தலைப்பாக வைத்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. வெளியானது முதலே டிரெண்டிங்கில் உள்ளது.
தமிழை போல தெலுங்கிலும் கோவிந்தா வசந்தா தான் இசை அமைக்கிறார்.தமிழ் பாடல்களை போல தெலுங்கிலும் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











