twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்றும் இன்றும் ஜெஸ்ஸியாக, ஜானுவாக முடியாத சமந்தா! த்ரிஷா த்ரிஷா தான்!

    |

    சென்னை: ஜெஸ்ஸி, ஜானு.. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் திரிஷாவை பீட் செய்ய முடியாமல் போயுள்ளார் சமந்தா.

    தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை திரிஷா. கடந்த ஆண்டு நடிகை திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் திரிஷா, படம் “96”. இந்த படத்தை சி. பிரேம் குமார் அவர்கள் எழுதி, இயக்கியுள்ளார்.

    96 telugu remake

    நடிகை திரிஷா அவர்கள் இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் என்று கூறலாம். மேலும், இந்த ’96’ படத்தின் மூலம் திரிஷா மீண்டும் ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவின் காதல் ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

    இவர்களுடன் இந்த படத்தில் தேவதர்ஷினி, சிறு வயது தேவதர்ஷினியாக அவரது மகள் நியதி, சிறு வயது விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர்(நடிகர் MS பாஸ்கர் மகன்), ஜனகராஜ், கௌரி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். கோவிந்மேனன் இசையில் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

    96 telugu remake

    இந்த படம் 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் ஒன்றாக படித்த ராமச்சந்திரன், ஜானகி தேவி இருவரும், பல வருடங்களுக்குப் பின் பழைய பள்ளி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து வைக்கும் பார்ட்டியில் ஒருவரை ஒருவர் சந்தித்து மனம் திறந்து பேசுகின்றனர். அவர்களுடைய பழைய நினைவுகளை அழகாக கூறியிருந்தார் இயக்குனர் பிரேம் குமார்.

    இந்த படத்தை தெலுங்கில் “ஜானு” என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். நடிகர் சர்வானந்த், சமந்தா நடிப்பில், ஜானு என பெயரிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரை பார்க்கும் போது 96 படத்தை அப்படியே ரீமேக் செய்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சர்வானந்த், சமந்தா ஆகியோரின் நடிப்பு இருந்தாலும் 96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு, இந்த படத்தில் வரவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும், சமந்தாவை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    தன்னை கலாய்ப்பவர்களுக்கு பதில் அளித்த சமந்தா, மிக்க நன்றி சிறப்பாக நடித்த திரிஷாவை போன்று நான் காப்பி அடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அது நடக்கவும் நடக்காது. ஜானு அதற்காக உருவாக்கப்பட்ட படம் கிடையாது. மற்றவர்கள் இதனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

    விண்ணை தாண்டி வருவாயா படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது அப்போதும் விமர்சனத்திற்கு உள்ளானார் சமந்தா. ஜெஸ்ஸி, ஜானு என்ற இரண்டு கதாபாத்திரத்திலும் திரிஷாவை சமந்தா மிஞ்ச முடியாது என்று ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Samantha has donned Trisha role in 96 remake in Telugu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X