தீவிர சிகிச்சை.. 98 வயதில் கொரோனாவை வென்ற ரஜினி, கமல் பட நடிகர்.. முன்னாள் பாடி பில்டராமே!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயது நடிகர், சிகிசைக்குப் பின் அதில் இருந்து மீண்டுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது கொடூரத்தை அரங்கேற்றியது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம், சமீப காலமாகக் குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
தினமும் புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,71,773 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,419 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தொற்றுக்கு 2,08,012 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணியும் தொடங்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த கொரோனாவுக்கு சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர்.

உண்ணி கிருஷ்ணன்
பின்னர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர். இந்நிலையில் 98 வயது மூத்த நடிகர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மலையாள நடிகரான இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தில் இவர் நடித்துள்ளார்.

பம்மல் கே சம்மந்தம்
கமல்ஹாசனின், பம்மல் கே சம்மந்தம், ராஜீவ் மேனன் இயக்கிய, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார்.

கோவிட்டை வென்றார்
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் கொரோனா வில் இருந்து மீண்டு விட்டார் என்றும் ஆனால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறவினர்கள் கூறியுள்ளனர். அவர் மகன் பவதாசன் கூறும்போது, அப்பா சின்ன வயதில் பாடிபில்டராக இருந்தவர். உடல்நலம் பேணுவதில் ஆர்வமுடையவர். அதனால் அவர் கொரோனாவை வென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











