98 வது ஆஸ்கர் விருதில் மறைந்த சரோஜா தேவி, கோட்டா சீனிவாச ராவுக்கு கௌரவம்.. நெஞ்சைத் தொட்டுட்டாங்க!
அமெரிக்கா: 98 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மிகவும் சிறப்பாகவும் கோலாகளமாகவும் நடைபெற்று முடிந்தது. இதில் கடந்த ஆண்டில் சிறப்பான உழைப்பை வெளிப்படுத்தி ஆஸ்கர் விருது தேர்வாளர்களை கவர்ந்தவர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. இதில் இம்முறை கடந்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டு ஆஸ்கரில் இருந்து 2026 ஆம் ஆண்டு ஆஸ்கருக்குள் மறைந்த உலகப்புகழ் பெற்ற திரைப்படக் கலைஞர்களை ஆஸ்கர் தரப்பில் கௌரவித்துள்ளனர். இதில் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருந்து மறைந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருந்து மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, தென்னிந்திய குணச்சித்திர நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பாலிவுட் நடிகை ஜெயஸ்ரீ கபீர், இயக்குநர் மற்றும் நடிகர் மனோஜ் குமார், ஆவணப்பட இயக்குநர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது.

தி சின்னர்ஸ்: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதில் அதிக நாமினேஷன் ஆன சின்னர்ஸ் படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த அசல் பின்னணி இசை என நான்கு விருதுகளைத் தட்டித் தூக்கியது. இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. மேலும் இதன் கதை மற்றும் திரைக்கதை ரசிகர்கள் அனைவரையுமே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக இருந்தது. கருப்பின மக்களின் வாழ்க்கை இசையுடன் எந்த அளவுக்கு பின்னிப் பிணைந்திருந்தது என்பதை கதையின் ஒரு பக்க திரைக்கதை காட்டியது எல்லாம் அசத்தல் தான்.

6 விருதுகள்: அதேபோல், ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படம் மொத்தம் ஆறு விருதுகளை தட்டி தூக்கியது அதாவது சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த காஸ்டிங், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த திரைக்கதை ( தழுவல்) என மொத்தம் ஆறு விருதுகளை தட்டி தூக்கியது. இந்த 98 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கடந்த 2025ஆம் ஆண்டு ஆஸ்கரில் இருந்து 2026ஆம் ஆண்டு ஆஸ்கருக்குள் மறைந்த உலகப்புகழ் பெற்ற திரைப்பட கலைஞர்களை ஆஸ்கர் தரப்பில் கௌரவித்துள்ளனர். இதில் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருந்து மறைந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

கௌரவம்: இதில் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருந்து மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, தென்னிந்திய குணச்சித்திர நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பாலிவுட் நடிகை ஜெயஸ்ரீ கபீர், இயக்குநர் மற்றும் நடிகர் மனோஜ் குமார், ஆவணப்பட இயக்குநர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











