Oscars 2026 Winner List : 98வது ஆஸ்கர் விருது.. யாருக்கு என்ன விருது? முழு விவரம் இதோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. கோனன் ஓ'பிரையன் விழாவை தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டு, சின்னர்ஸ் திரைப்படம் 16 பரிந்துரைகளைப் பெற்றிருந்த நிலையில், அந்த படத்துக்கு கடும் போட்டியாக ஓன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படம் மாறியது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த துணை நடிகர் என மொத்தம் 6 பிரிவுகளில் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த One Battle After Another திரைப்படம் வெற்றிப் பெற்று மாஸ் காட்டியது. அதனை தொடர்ந்து சின்னர்ஸ் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை பெற்று அசத்தியது. சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பிரிவுகளில் சின்னர்ஸ் திரைப்படம் வென்றது.
ஆஸ்கர் விருது விழாக்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை ஒளிப்பதிவு பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை Autumn Durald Arkapaw பெற்றார். அவதார் மற்றும் F1 திரைப்படங்கள் தலா ஒரு ஆஸ்கர் விருதுகளை வென்றன.
2026 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதை வெற்றவர்களின் முழு பட்டியல் இதோ.

சிறந்த துணை நடிகை:
Amy Madigan - Weapons படத்திற்காக சிறந்த துணை நடிகை ஆஸ்கர் வென்றார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படம் :
KPop Demon Hunters - வெற்றி
சிறந்த அனிமேஷன் குறும்படம்:
The Girl Who Cried Pearls - வெற்றி
சிறந்த உடை வடிவமைப்பு:
Frankenstein (Kate Hawley) - வெற்றி
சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிங்:
Frankenstein - வெற்றி
சிறந்த காஸ்டிங்:
One Battle After Another படத்திற்காக Cassandra Kulukundis ஆஸ்கரை வென்றார்.
சிறந்த நேரடி நடிப்பு குறும்படம்:
The Singers - இணைந்து வெற்றி
Two People Exchanging Saliva - இணைந்து வெற்றி
சிறந்த துணை நடிகர்:
Sean Penn - One Battle After Another படத்திற்காக ஆஸ்கர் வென்றார்.
சிறந்த திரைக்கதை:
One Battle After Another படத்திற்காக Paul Thomas Anderson தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார்.
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை:
Sinners - (Ryan Coogler) - வெற்றி
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:
Frankenstein - வெற்றி (தமரா டெவரெல் மற்றும் ஷேன் வியூ)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்:
Avatar: Fire and Ash படம் வெற்றி பெற்றது
சிறந்த ஆவணப்பட குறும்படம்:
All the Empty Rooms என்ற குறும்படம் வெற்றி பெற்றது
சிறந்த ஆவணப்படம்:
Mr Nobody Against Putin சிறந்த ஆவணப்பட வரிசையில் பல படங்கள் போட்டியிட்ட நிலையில் சிறந்த ஆவணப்படமாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த ஒரிஜினல் பின்னணி இசை:
Sinners - லுட்விக் கோரன்சன்- வெற்றியாளர்)
சிறந்த ஒலி (Sound):
F1 திரைப்படம் வென்றது
சிறந்த எடிட்டிங்:
One Battle After Another
சிறந்த ஒளிப்பதிவு :
Sinners
சிறந்த சர்வதேச திரைப்படம்:
Joachim Trier இயக்கத்தில் கடந்த ஆண்டு 'Sentimental Value' வெளியான இந்த படம் நல்ல வசூலை அள்ளியது.
சிறந்த ஒரிஜினல் பாடல் (Original Song):
Golden - KPop Demon Hunters

சிறந்த நடிகர்:
"சின்னர்ஸ்" படத்தில் சிறப்பாக நடத்ததற்காக மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.
சிறந்த நடிகை:
Hamnet படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jessie Buckley வென்றார்.
ஆஸ்கர் விருதை பெறும் ஐரிஷ் நபர் இவராவர்
சிறந்த இயக்குநர்:
One Battle After Another படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை பால் தாமஸ் ஆண்டர்ஸன் (Paul Thomas Anderson) வென்றார்
சிறந்த திரைப்படம்:
சிறந்த திரைப்படமாக One Battle After Another படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருதை வென்றது.
சிறந்த இயக்குநருக்கான விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் வென்றார். முன்னதாக சிறந்த இயக்குநருக்கான விருதை நடிகர் பால் தாமஸ் ஆண்டர்சன் என தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருந்தது மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











