ஆஸ்கரில் இருந்து வெளியேறிய ஹோம்பவுண்ட்.. ஜெஸ்ட் மிஸ்ஸில் தவறிப்போன ஆஸ்கர்

சென்னை: திரைப்பட உலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாக அங்கீகரிப்படுகிற அல்லது கருதப்படுகிற விருதுகளில் ஒன்று ஆஸ்கர். ஓவ்வொரு ஆண்டும் இந்த ஆஸ்கர் விருதை எந்தெந்த படங்கள், எந்தெந்த பிரிவுக்காக வெல்கிறது என்பதை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படமான ஹோமபவுண்ட் படம் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்று, ஆஸ்கரை வெல்லும் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கையில், ஹோமபவுண்ட் படம் வெளியேறியது.

98th Oscars Nominations Announced Indian Movie Homebound Came Out And Miss Oscars

98ஆவது ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலை ஆஸ்கர் இன்று அதாவது ஜனவரி மாதம் 22ஆம் தேதி அறிவித்தது. அதில், வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் இருந்து ஹோமபவுண்ட் படம் வெளியேறியது. இது இந்திய சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்ததைக் கொடுத்துள்ளது.

வெளிநாட்டு படங்கள்: 2026-ன் சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட 'ஹோம்பவுண்ட்', அதன் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கான கடைசி கட்ட நாமினேசனுக்கு தேர்வாகவில்லை. அந்த பிரிவில், பிரேசிலின் 'தி சீக்ரெட் ஏஜென்ட்', பிரான்சின் 'இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்', நார்வேயின் 'சென்டிமென்டல் வேல்யூ', ஸ்பெயினின் 'சீரத்', துனிசியாவின் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாப்' ஆகிய ஐந்து படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

நெகிழ்ச்சி உரையாடல்: தயாரிப்பாளர் கரண் ஜோஹர், படத்தின் மீதுள்ள அன்பையும், இயக்குநர் நீரஜ் கைவன் மீதான பாராட்டையும் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தினார். "பெருமை!!! உங்களது வெளிச்சத்தில் நாங்கள் மகிழ அனுமதித்த உங்களுக்கு லவ் யூ நீரஜ் கைவன்!" என்று அவர் பகிர்ந்தார். 'ஹோம்பவுண்ட்' படக் காட்சிகளைக் கொண்ட படத்தொகுப்பையும் இணைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இயக்குநர் நீரஜ் கைவன், கரண் ஜோஹரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை மறுபகிர்வு செய்தார். அதனுடன், "நன்றி கரண் ஜோஹர்! நீங்கள் எனக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. லைவ் யூ." என்று பதிவிட்டுருப்பதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X