ஆரிரோ.. ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு.. 9 ஆண்டுகளை கடந்த விக்ரம் படம் #9YrsOfBBDeivaThirumagal

சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படம் வெளியாகி இன்றுடன் 9 வருடம் ஆகிறது.

விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது.

ஹாலிவுட் படமான ஐ எம் சாம் படத்தின் இன்ஸ்பிரேஷனாக இந்த படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தெய்வமகன் டைட்டிலை தான் முதலில் இந்த படத்திற்கு இயக்குநர் ஏ.எல். விஜய் சூட்டி இருந்தார். ஆனால், அந்த தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்ற சர்ச்சைகள் கிளம்பவே, வேறு வழியின்றி, தெய்வ மகள் என்றும் கடைசியாக தெய்வத்திருமகள் என்றும் டைட்டில் மாறியது. தெய்வத் திருமகள் என்ற பெயரிலும் பழைய படம் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான விக்ரம்

வித்தியாசமான விக்ரம்

ரிஸ்க் எடுத்து நடிப்பது தனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என பலமுறை நிரூபித்துள்ள நடிகர் விக்ரம், இந்த படத்திற்காக வித்தியாசமான விக்ரமாகவே மாறி நடித்திருப்பார். அச்சு அசல் மன நலம் குன்றியவராகாவே நடிக்க விக்ரம் செய்த முயற்சியால், இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும், அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் சில காலம் அவர் தவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமலா பால்

அமலா பால்

மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு, ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் விஜய் இயக்கத்தில் அமலா பால் இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு தான் இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

மறக்காத ரசிகர்கள்

மறக்காத ரசிகர்கள்

தெய்வத்திருமகள் படம் ரிலீசாகி 9 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அந்த படத்தின் ரிலீஸை இன்னும் மறக்காமல் விக்ரம் ரசிகர்கள் #9YrsOfBBDeivaThirumagal என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். அந்த படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அழ வைத்த கிளைமேக்ஸ்

அழ வைத்த கிளைமேக்ஸ்

இந்த படத்தில் விக்ரமுக்கு இணையாக பேபி சாரா தனது சிறப்பான நடிப்பை அந்த சிறு வயதிலேயே கொடுத்திருந்தார். அதிலும், அந்த கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து கண் கலங்காதவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் மனிதர்களே இல்லை என அந்த காட்சியின் ஓவியத்தை பதிவிட்டு விக்ரம் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஆரிரோ ஆராரிரோ

ஆரிரோ ஆராரிரோ

"ஆரிரோ ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு" என்ற மனதை உருக வைக்கும் பாடல் தொடங்கி, இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களையும் மறைந்த பிரபல பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தான் எழுதி இருந்தார். மதராசபட்டினம் படத்திற்காக அவர் எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில், இந்த படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

மிஸ்ஸான தேசிய விருது

மிஸ்ஸான தேசிய விருது

இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு அது கிடைக்காமல் போனது. ஆனால், விஜய் டிவி மற்றும் பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சிகளில் சிறந்த நடிகருக்கான விருதினை சியான் விக்ரம் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. ஐ படத்திற்கும் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது அவரது ரசிகர்களை மிகவும் அப்செட் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X