21 வயதில் துயர முடிவு.. புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட யூடியூபர்!

சென்னை: 21 வயதான பிரபல யூடியூபர் கோமாளி, தனது காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதனால் மனவேதனையில் இருந்த கோமாளி நேற்று முன்தினம் அதாவது (பிப்ரவரி 23)ந் தேதி திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21வயதான கோமாளி, மல்லரெட்டி பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் படித்துள்ளார். தனது ஓய்வு நேரத்தில் யூடியூப் சேனலை உருவாக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்த நேரத்தில் தான் யூடியூபரான கோமாளிக்கு மற்றொரு யூடியூபரும். மென்பொருள் பொறியாளருமான நிகில் ரெட்டியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த பிரிவை நிகில் ரெட்டி ஏற்றுக்கொண்ட போதும், கோமாளியால் இந்த பிரிவை ஏற்றுகொள்ள முடியாமல் தவித்துள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.

YouTuber death

யூடியூபவர் தற்கொலை: சில மாதங்களுக்கு முன் கோமாளி, தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார். பின் அவரை உறவினர்கள் அழைத்து சமாதானப் படுத்தினார். இதையடுத்து, மீண்டும் கோமாளியின் திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, ​நிகில் ரெட்டிக்கு கோமாளி ஃபோன் செய்தாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை, கோமாளி தனது உறவினர்களுடன் மணிகொண்டாவில் உள்ள சித்ரபுரி காலனியில் தங்கியிருந்த போது, வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் புகார்: இதையடுத்து, கோமாளின் தாயார் பிப்ரவரி 24ந் தேதி ராய்துர்கம் காவல் நிலையத்தில் நிகில் ரெட்டி மீது புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, கோமாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 21வயதே ஆன கோமாளியின் மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சினேகா தற்கொலை தடுப்பு மையம்: எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல, மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவி மையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X