சாதிச்சிட்டிங்க இமான்.. இதைத்தவிர வேறொரு அடையாளம் வேண்டுமா? தீயாய் பரவும் உருக வைக்கும் வீடியோ!

சென்னை: கண்ணான கண்ணே பாடலைக் கேட்டு அழுது கொண்டிருந்த குழந்தை கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி இமான். இதுவரை அவர் இசையமைத்த படங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

விஜய், அஜித், விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். கடைசியாக இவரது இசையில் வெளியான படம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான நம்ம வீட்டுப்பிள்ளை.

விருப்பப் பாடல்

விருப்பப் பாடல்

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. அந்த பாடலை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் பெரியவர்களும் அதிகம் ரசித்தனர். இந்த பாடல் பல விருதுகளையும் தட்டிச் சென்றது. கடந்த ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலிலும் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது.

உருக வைக்கும் ரியாக்ஷன்

உருக வைக்கும் ரியாக்ஷன்

குறிப்பாக பெற்றோருக்கும் அப்பாக்களுக்கும் பிடித்தமான பாடலாக உள்ளது கண்ணான கண்ணே பாடல். இந்நிலையில் அழுது கொண்டிருக்கும் ஒரு பெண் குழந்தை அந்த பாடலை கேட்டு திடீரென அழுகையை நிறுத்திவிட்டு கொடுக்கும் ரியாக்ஷன் உருக வைப்பதாக உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இமான் லைக்ஸ்

சமூகவலைதளங்களில் தீயாய் பரவும் அந்த வீடியோவை இசையமைப்பாளர் இமானும் லைக் செய்திருக்கிறார். அதனை ஷேர் செய்துள்ள நெட்டிசன்கள், எதற்க்காக பிறந்தோமோ? அப்பிறப்பின் கனவும் லட்சியமும்
முழுமையாக நிறைவேறிவிட்டது என்று பெருமைப்பட்டுக்கொள்ள இதைத்தவிர வேறொரு
அடையாளம் வேண்டுமா? என இமானை புகழ்ந்து வருகின்றனர்.

வாழ்க்கை..

குழந்தையின் இந்த வைரல் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன் இது பாட்டு இல்லை.. வாழ்க்கை என கூறியிருக்கிறார். மேலும் ஒவ்வொரு வரிகளும் தவிப்பு.. எதிர்பார்ப்பு.. பூரிப்பு.. என விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலின் வரிகளை வர்ணித்தும் அனுபவித்தும் கூறியிருக்கிறார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X