தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்...மெகா பட்ஜெட் படமாக உருவாகிறதா

சென்னை : தளபதி 65 படம் பற்றிய பேச்சுக்கள் அடங்குவதற்குள் தளபதி 66 பற்றிய அப்டேட்கள் வர துவங்கி உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

A big addition to Thalapathy 66 due to mega budget?

தெலுங்கு ஹிட் பட டைரக்டர் வம்சி பைடிபள்ளி தான் தளபதி 66 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மெகா பான் இந்தியன் படமாக உருவாக உள்ள இந்த படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் பற்றிய ஆரம்ப கட்ட பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த படம் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட உள்ளதாம். பிவிபி ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கு முன் பிவிபி ப்ரொடெக்ஷன்ஸ் உடன் இணைந்து வம்சி இயக்கிய தோழா (ஓபெரி), மகேஷ்பாபு நடித்த மகரிஷி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.

லேட்டஸ்ட் தகவலாக தில் ராஜுவுடன், பிவிபி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தளபதி 66 படத்தை தயாரிக்க உள்ளதாம். இதனால் இந்த படமும் பிரம்மாண்ட வெற்றியை பெறும் என இப்போதே முடிவு செய்து விட்டனர் விஜய் ரசிகர்கள். விரைவில் இது பற்றிய மேலும் பல அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளன.

இதற்கிடையில் விஜய், தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை ஏற்கனவே முடித்து விட்டார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். கொரோனா, லாக்டவுன் போன்ற பிரச்சனைகள் சரியான உடன் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Recommended Video

Sunny Leone செய்யும் உதவி குவியும் பாராட்டு | அமைதியா உதவும் Suriya

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X