தளபதி 64 படத்தில் இணைய போகும் பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்.. தீவிர பேச்சுவார்த்தையில் படக்குழு!
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள தளபதி 64 படத்தில் பிக்பாஸ் சீசன் 3 பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த வருடம் மே மாதம் இந்த படம் வெளியாகும். சென்னையில் நடக்கும் கதை இது என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

யார்
இப்படி படத்தில் நிறைய பேர் நடிக்க உள்ள நிலையில் இன்னொரு புதிய பிரபலமும் படத்தில் இணைய உள்ளார் என்று தகவல்கள் வருகிறது. அதிலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் இதில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 போட்டி
பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் முகேன் ராவ் வெற்றிபெற்றார். அதேபோல் சாண்டி இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் படத்தில் அதிகமாக கவனம் ஈர்த்தனர்.

தர்ஷன் எப்படி
தர்ஷன் ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முகேன் ராவ் வரிசையாக படங்களில் நடிக்க உள்ளார். இவருக்கு நிறைய பேர் கதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

தளபதி 64 படம்
இந்த நிலையில் இந்த நான்கு பேரில் ஒருவர் தற்போது தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த வாரம் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











