'காலா' பாடல் நாளை ரிலீஸ்.. தனுஷ் செம சர்ப்ரைஸ் அறிவிப்பு!
Recommended Video

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' படத்தின் பாடல்கள் வரும் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
தனுஷ் அறிவித்த சர்ப்ரைஸால் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த சர்ப்ரைஸ் இதுதான். மே 9 அன்று பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மே 1 நாளை மாலை 7 மணிக்கு முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்பட இருக்கிறது.

'செம்ம வெய்ட்டு..' எனத் தொடங்கும் இந்த சிங்கிள் டிராக் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளையே வெளியிடப்படுகிறது. இந்த திடீர் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் இசைக் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே, பா.ரஞ்சித் - ரஜினி - சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவான 'கபாலி' பாடல்கள் செம வரவேற்பைப் பெற்றதைப் போல இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











