கொரோனாவால் பிரபல இளம் நடிகர் மரணம்.. சிறந்த சிகிச்சை கிடைத்திருந்தால்.. கலங்க வைக்கும் கடைசி பதிவு!

சென்னை: கொரோனா தொற்றுக்கு பிரபல இளம் நடிகர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் வோரா. உத்தரகாண்டை சேர்ந்த இவர் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்தார்.

நாடக நடிகராக நடிப்பை தொடங்கிய இவர் சினிமா வெப் சீரிஸ்கள் என பிஸியாக இருந்து வந்தார். யூட்யூப் சேனலையும் நடத்தி வந்தார்.

நடிகருக்கு கொரோனா

நடிகருக்கு கொரோனா

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார் நடிகர் ராகுல் வோரா. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆக்சிஜன் படுக்கை தேவை

ஆக்சிஜன் படுக்கை தேவை

அவருக்கு மருத்துவமனையில் சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்துபோன ராகுல் வோரா கடந்த 4ஆம் தேதி தனக்கு ஆக்சிஜன் படுக்கை தேவை, எங்கு கிடைக்கும் என்றும் கேட்டிருந்தார்.

மறுபடியும் பிறந்துவருவேன்

மறுபடியும் பிறந்துவருவேன்

மேலும் தனது பேஸ்புக் பக்கத்தில், முறையான சிகிச்சை கிடைத்தால் காப்பாற்றப்படுவேன் என்றும் இப்போது நம்பிக்கையை இழந்து விட்டேன்; மறுபடியும் பிறந்து நல்ல செயல்களை செய்வேன் என்றும் தனது பேஸ்புக்கில் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

பலரும் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பதில் அளித்து வந்தனர். சிலர் அவருக்கு உதவவும் முயற்சி செய்தனர். இந்நிலையில் நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ராகுல் வோரா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 35.

திடீர் மரணம் ரசிகர்கள் அதிர்ச்சி

திடீர் மரணம் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ராகுல் வோராவை பேஸ்புக்கில் 1.9 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மனைவி குற்றச்சாட்டு

மனைவி குற்றச்சாட்டு

ரசிகர்களும் பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகுல் வோராவுக்கு முறையான சிகிச்சை கிடைக்காததே அவரது மரணத்திற்கு காரணம் என ராகுல் வோராவின் மனைவி ஜோதி திவாரி குற்றம்சாட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X