வில்லிவாக்கம் தொகுதியில்.. த.வெ.க பொதுக்கூட்டத்தில் வீசப்பட்ட பாட்டில்.. பதறிய பெண்கள்!
சென்னை: பெங்களூர் தொகுதியில் நேற்று தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு, வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில், திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அதே தொகுதியில் த.வெ.க பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது பாட்டில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளராக, அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் அண்ணா நகர் கார்த்திக் மோகன் களமிறங்கிறார்.

பிரச்சாரத்தில் பாட்டில் வீச்சு: அதன்படி, வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனாவை ஆதரித்து இன்று நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அங்கிருந்த பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெண்கள் பதறிப்போனார்கள். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து, மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூனா, கூட்டத்தில் இருக்கும் பெண்கள் மீது சோடா பாட்டிலை சிலர் வீசி உள்ளார்கள். இது திமுகவின் அராஜகத்திற்கு நாங்கள் குரல் கொடுப்போம். இந்த வேலையை செய்தவர்களை உடனே கைது செய்யவில்லை என்றால், இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்றார்.
பிரச்சாரம் நடக்கக்கூடாது என்பதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்றும், ரௌடிசத்தின் மொத்தம் என பொதுமக்கள் கூறி வருகின்றனர். நேற்று வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்ததால், கொந்தளித்த மகள், கரூரில் ஆம்புலன்சை அனுப்பினார்கள். ஆனால், கொளத்தூரில் காலி பேருந்துகளை இந்தப்பக்கம் அந்தபக்கம் அனுப்பி நெரிசலை ஏற்படுத்தினார்கள் என குற்றம்சாட்டி இருந்த நிலையில், தற்போது பிரச்சாரத்தில் கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











