நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கைது... என்ன காரணம் தெரியுமா?
சென்னை : நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது எதிர்வீட்டுக்காரர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக தாடி பாலாஜி நடித்துள்ளார். வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக கலக்கியுள்ளார்.
அதன் பின்னர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி நடுவராக இருந்தார்.

நடிகர் தாடி பாலாஜி
சின்னத்திரை, வெள்ளித்திரையில் காமெடியனாக நடித்து பாப்புலரான தாடி பாலாஜி, பிக் பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என நித்யா குற்றம் சாட்டி இருந்தார்.

இருவரும் பிரிந்தனர்
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நித்யாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இருவரும் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு, மகள் போஷிகாவை பகடைக்காயாக பயன்படுத்தி நித்யா தன்னிடம் பணம் பறிக்க முயன்று வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார். இதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நித்யா மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னையை அடுத்த மாதவரத்தில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்த நிலையில்,நேற்று நித்யா, எதிர்வீட்டு உரிமையாளரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார்.

நித்யா கைது
காலையில் சேதப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த,எதிர்வீட்டுக்காரர் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, நித்யா காரை தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி ஆதாரத்துடன் மாதவரம் காவல் நிலையத்தில் நித்யாவுக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் பிறர் சொத்தை சேதப்படுத்திய பிரிவில் வழக்குப்பதிவு செய்து நித்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











