Pa.Ranjith - பா.இரஞ்சித் உதவி இயக்குநர் மீது வழக்குப்பதிவு - என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Pa. Ranjith (பா.இரஞ்சித்) இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் பெரிய அளவில் ஒலிக்காத தமிழ் சினிமாவில் இரஞ்சித் வந்த பிறகுதான் அந்தக் குரல் சத்தமாக கேட்க ஆரம்பித்தது. அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்தில் ஏதோவொரு உரையாடலை தொடங்கிவைக்கும். அந்த அளவுக்கு அவரது படத்தின் கருப்பொருள் அமைந்திருக்கும் என்பது அவரது தனிச்சிறப்பு.

A case has been registered against the Pa.Rajith Assistant director

தங்கலான் இரஞ்சித்: பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக முகநூலில் வரும் கருத்துக்கள் பொல் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இரஞ்சித் இயக்கியிருக்கிறார் என கடும் விமர்சனம் எழுந்தது. அதனையடுத்து அவர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.

ஆஸ்கருக்கு செல்லும் இரஞ்சித்: பா,.இரஞ்சித்தின் கனவுப் படமாக உருவாகும் இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் படக்குழுவிடம் இருக்கிறது. விக்ரம் பிறந்தநாளையொட்டி தங்கலான் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் தங்கலான் படம் தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளமாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.

பா. இரஞ்சித் உதவி இயக்குநர் மீது புகார்: இந்தச் சூழலில் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருக்கும் விடுதலை சிகப்பி என்பவர் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் கடந்த 30ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தார்.

விடுதலை மீது வழக்குப்பதிவு: இந்நிலையில் சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புணபடுத்தும்வகையில் செயல்படுதல் என மொத்தம் ஐந்து பிரிவுகளின் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலை சிகப்பி தங்கலான் படத்திலும் உதவி இயக்குநராக பணிபுரிகிறார் என கூறப்படுகிறது.

A case has been registered against the Pa.Rajith Assistant director

விலா எலும்பு முறிவு: முன்னதாக, தங்கலான் படத்தின் ஷூட்டிங் சில நாள்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடந்துவந்தது. அதில் விக்ரமும் கலந்துகொண்டார். அப்போது ஏற்பட்ட விபத்தில் விக்ரமுக்கு அடிப்பட்டு அவருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் தற்போது வீட்டில் முழு ஓய்வு எடுத்துவருகிறார். அவர் உடல்நலம் தேறி விரைவில் தங்கலான் ஷூட்டிங்கில் மீண்டும் பங்கெடுப்பார் என படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X