twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமா .. நான் எப்ப "தல" ரசிகையானேன்?.. ஒரு ஸ்வீட் மடல்!

    |

    அஜித் என்ற கலைஞனின் ரசிகையாக எப்போது மாறினேன் என்று யோசித்து பார்க்கிறேன் . பெரிதாக நினைவில்லை என்றாலும் சரியாக சொல்ல முடியும் . அந்த பள்ளி பருவத்தில் எதோ தொலைக்காட்சியில் பாடல்கள் பார்ப்பது போல பார்த்து கொண்டிருக்கும்போது ஒலிக்கிறது ஒரு பாடல்.

    Recommended Video

    தல அஜித் குமார் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள்

    "சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது" என்று ராஜஸ்தான் பாலைவன ஒட்டகத்தின் இடையே ஒரு முகம் .. சின்னதாய் ஒரு சிரிப்பு . அவ்வளவு அழகு .. பாடல் ஒட்டகம் பாலைவனம் அந்த ஊரு உடை எல்லாம் மறந்து போய் நினைவில் நின்றது ஒன்று மட்டுமே .. அந்த புன்சிரிப்பு பூத்த முகம் மட்டும் அப்படியே பதிந்து விட்டது . அன்று பிடித்த முகம் இன்று வரை அப்படியே ... அது தான் நம்ம அஜித்.

    A casual review of a Ajiths fan

    அந்த காலத்தில் டிவி பார்ப்பது எல்லாம் எப்போதாவது தான். பெரிய சினிமா அறிவு எல்லாம் இல்லை. வாலி படத்தின் காட்சி தொலைகாட்சியில் போய் கொண்டிருந்தது. 2 அஜீத். தன் சகோதரன் மனைவி சிம்ரனிடம் தவறான எண்ணத்தோடு இருக்கும் ஒரு அஜித் . இன்னொரு அஜித் ரொம்ப நல்ல அழகான குணத்தோடு கூடியவர். டபுள் ஆக்ட் படம் மறக்க முடியுமா.

    இந்த ரெண்டு கதாபாத்திரத்திலும் எவ்வளவு வித்தியாசம் காட்டி அதுவும் அந்த ஆன்டி ஹீரோ வேடத்தில் அற்புதமாய் நடித்திருப்பார். அனால் அப்போது எல்லாம் அந்த காட்சி பார்த்தபோது அஜித் பிடிக்கவே இல்லை. தம்பி தான் வாங்கிய புது பென்னை அண்ணன் முதலில் எழுதி பார்க்க வேண்டும் என்று ஆசையோடு நீட்ட புது பேனாவை எழுதி பார்க்கும் ஆன்டி ஹீரோ அஜித் பென்னை மட்டும் அல்ல உன்னையும் தான் என்று எழுதி காட்ட சிம்ரன் கொடுடா அந்த பேப்பரை என்று அதட்ட அப்படியே அந்த பேப்பரை வாயில் போட்டு மெல்லும் காட்சி என நடிப்பு அற்புதம் .

    மங்காத்தாடா.. தல அஜித் ஆடிய மாஸ் கேம்.. கிளாஸ் பாடல்களை போட்டு யுவனும் ஸ்கோர் பண்ணியிருப்பாரு!மங்காத்தாடா.. தல அஜித் ஆடிய மாஸ் கேம்.. கிளாஸ் பாடல்களை போட்டு யுவனும் ஸ்கோர் பண்ணியிருப்பாரு!

    கல்லூரி வாசல் பட கவர்ச்சி காட்சி, வாலி பட ஆன்டி ஹீரோ போன்ற கதாபாத்திரங்கள் பார்க்கும்போது அது நடிப்பு என தெரியாமல் பிடிக்காமல் போன அஜித் காதல் கோட்டை என்ற ஒற்றை படத்தில் இதயத்தில் கோட்டை கட்டி குடி புகுந்துவிட்டார் என்று சொல்லலாம். அப்புறம் முகவரி தாடி, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் தாடி என்று எத்தனையோ படங்களில் அஜித்தின் தாடியையும் அணு அணுவாய் ரசித்து தோழிகளுக்கும் அஜித் விஜய் தல தளபதி என்ற போட்டி பேச்சோடு பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களும் கடந்து போகும்.

    A casual review of a Ajiths fan

    அப்புறம் ரெட் ல போட்ட மொட்டை அப்புறம் அதில போட்ட உடம்பு என்று அஜித் கொஞ்சம் மாறி நிறைய பட தோல்விகளை சந்தித்தபோதும் அஜித் என்ற மனிதன் மேல் ரசிகையாய் ஏற்பட்ட காதல் மட்டும் குறையவே இல்ல. ஜனா மாதிரி படங்கள் நல்லா போகல. சில படங்கள் நல்லா இல்ல அப்படி னு இருந்தா "ஏன்டா இப்படி படம் பண்றான்" என்று பாசமாக புலம்பிய நாட்கள்.. அப்புறம் பில்லா வந்தபோது மறுபடியும் களை கட்ட ஆரம்பித்த தலை .. காட் பாதர் பில்லா எல்லாம் நம்ம கல்லூரி காலத்தில் செம செம திரைப்படங்கள். அஜித் மீண்டு எழும்ப ரசிகையாய் எனக்கும் சந்தோசம். தோல்வியோ வெற்றியோ ரசிகனின் அன்பு எப்போதும் குறைவதே இல்லை.

    அதுவும் ஆண்கள் எல்லாம் சீசனுக்கு சீசன் சிம்ரன் , ஜோதிகா, த்ரிஷா , அனுஷ்கா, கீர்த்தி என்று மாறிக்கொண்டிருக்கும்போது ரசிகைகள் மட்டும் ரசனை என்னமோ மாத்துறது இல்லை. அப்படிதான் நான். அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன் என்று காதல் மன்னன் அஜித் முதல் ஆசை அஜித் , தானா வளர்ந்த காட்டு செடி என்று முரட்டு மனிதனாய் நிற்கும் அமர்க்களம் , ரஜினியின் பில்லாவுக்கு இன்னொரு ஸ்டைல் கொடுத்த அஜித் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அஜித் ஒவ்வொரு அழகு.

    இப்போது வெள்ளை முடி வந்தாலும் பெப்பர் சால்ட் என்று நாங்க கொண்டாடி கொண்டிருக்கோம். அஜித் எப்படி வந்தாலும் அழகு அது உன்னை அறிந்தால் பட சத்யா மாதிரி சூப்பர் ஸ்டைல் ஆனாலும் சரி விசுவாசம் பட வெள்ளை முடி மனிதனாக மக்களிடம் உருகும் தந்தையாக என்று எப்படி வந்தாலும் அஜித் அஜித் தான் . ஆழமான அன்போடு நூறாண்டு வாழ வாழ்த்துக்கள் அஜித்.

    - Inkpena

    Read more about: ajith அஜீத்
    English summary
    This is a casual reveiw of Actor Ajith on his birthday by his fan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X